Thiruvallur

News September 27, 2024

திருவள்ளூர் ஆட்சியர் பொதுமக்களுக்கு அழைப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வருகின்ற அக் 2 ஆம் தேதி புதன்கிழமை காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட விவாதங்களில் பொதுமக்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

News September 27, 2024

திருவள்ளூரில் அரசு பள்ளிகள் மேம்பாட்டிற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை சீரமைக்கவும், புதிய பள்ளி கட்டடம் மற்றும் வகுப்பறைகள் கட்டுவதற்கு, 10.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். இப்பணிகள் 6 மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு வர வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News September 26, 2024

பூட்டை உடைத்து 99 சவரன் நகை கொள்ளை

image

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அடுத்த கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலுநாயுடு. இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 99 சவரன் நகை, 70 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 26, 2024

கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 பேர் கைது

image

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் போலிவாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை அருகே மேல் நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் (19), பவுன்ராஜ் (24) ஆகிய 2 பேரும் கத்தி மற்றும் ராடு (இரும்பு கம்பி) உடன் கொள்ளையடிக்க காத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

News September 26, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 26, 2024

ஆவடி பகுதியில் 13 செ.மீ. மழை பதிவு

image

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ஆவடி பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவாலங்காடு 11.3 செ.மீ. செங்குன்றம் 7.5 செ.மீ. மழை பதிவானது. ஊத்துக்கோட்டை பகுதியில் 6.7 செ.மீ. மழை பதிவானது. திருவள்ளூர் மற்றும் சோழவரத்தில் 5செ.மீ. , மழை பதிவானது.

News September 26, 2024

திருவள்ளூர் மாவட்ட எஸ்பி தகவல்

image

திருவள்ளூரில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்று வரை குட்கா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 344 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14,538 குட்கா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஒரு கோடியே 45 லட்சத்து 38 ஆயிரத்து 9 7 ஆகும். இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி தகவல்.

News September 25, 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியவர் கைது

image

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ராமதாஸ் என்பவரது பணப் பலன்களை விடுவிக்க ரூ. 3000 லஞ்சம் வாங்கிய பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கணக்கு பிரிவு அலுவலர் ஷேக் அகமது என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்தனர். ரசாயனம் கலந்த பணத்தை கொடுத்த போது கையும் களமாக சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 25, 2024

38 பேர் கைது: எஸ்பி தகவல்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக 38 வழக்குகள் பதிவு செய்து 38 பேர் கைது செய்யப்பட்டு 3,245 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் மற்றும் மதுபான வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர் படுத்தி 2 பிரிவுகளின் கீழ் நன்னடத்தை பிணைப் பத்திரம் பெறப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.