India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் நசரேத்பேட்டையை சேர்ந்த 9 வகுப்பு மட்டுமே படித்த எஸ்தர்(32) என்ற பெண் கிளினிக் நடத்தி மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மருத்துவர் பாபு தலைமையில் அதிகாரிகள் அங்கு சோதனைக்கு சென்றனர். அப்போது ஒருவர் வயிறு வலி என நடித்தார். தொடர்ந்து, அவருக்கு ஊசி போட முயன்ற எஸ்தரை அதிகாரிகள் கைது செய்து, கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். *நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்.
அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து முதல் பட்டதாரியாகவும், முதல் அரசு அதிகாரியாகவும், திருவள்ளூரின் 24வது ஆட்சியராகவும் உள்ளார் பிரதாப். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் தன் நடவடிக்கைளால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அண்ணா பல்கலையில் பட்டம் பெற்று முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பிரதாப் தான் இடது பலருக்கு முன்னுதாரணம். ஷேர் பண்ணுங்க
எல்லாபுரம் – 7708269571, கும்மிடிப்பூண்டி – 7548801201, கடம்பத்தூர் – 7305921319, மீஞ்சூர் – 7904665459, பள்ளிப்பட்டு – 8220804959, பூந்தமல்லி – 7010044876, பூண்டி – 6385348540, புழல் – 7010559670, RK பேட்டை – 7708736007, சோழவரம் – 7558198922, திருத்தணி – 7904996062, திருவாலங்காடு – 7550177471, திருவள்ளூர் – 7550147704 ஆகிய வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 – 17 வயதுடைய சிறுவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 விபத்துகள் நடந்துள்ளன. அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுவர்களுக்கு வாகனத்தை இயக்க அனுமதி வழங்கும் பெற்றோர்களே அதன் விளைவுகளுக்கான தண்டனையை ஏற்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். உப்பு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், திருவள்ளூரில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி / பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம். அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் போலீஸ் எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்-9498147528, கும்மிடிபூண்டி-9498147510, பொன்னேரி-9498146658, , ஊத்தூக்கோட்டை-9498147775, திருத்தணி- 9498147530. *உங்கள் வீட்டு&தெரிந்த பெண்களுக்கு பகிர்ந்து சேவ் பண்ண சொல்லவும். கண்டிப்பாக உதவவும்.*
▶அத்திப்பட்டு எல்லையம்மன் கோயில், ▶ஆரணி காணியம்மன் கோயில், ▶ஆவடி முத்துமாரியம்மன் கோயில், ▶கும்மிடிப்பூண்டி அஞ்சல் கன்னியம்மன் கோயில், ▶திருத்தணி தணிகாச்சலம்மன் கோயில், ▶திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், ▶பட்டாபிராம் நாகவல்லியம்மன் கோயில், ▶பழவேற்காடு தர்மராஜா கோயில், ▶பொன்னேரி மாரியம்மன் கோயில், ▶பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், ▶திருப்பாலைவனம் ஆலையம்மன் கோயில். ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரிடம் ஆந்திராவைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவர் அறிமுகமாகி, தங்களிடம் அரைகிலோ தங்கக்கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரண்யா தனது அண்ணன் இர்பானிடம் தெரிவிக்க, இர்பான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அப்போது, போலீசார் தங்கக்கட்டி வைத்திருந்த அக்கா, தம்பியை சுற்றி வளைத்தனர். விசாரணையில், அது பித்தளை என்பது தெரியவந்தது.
Sorry, no posts matched your criteria.