India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னகாவனம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத் தொடக்க விழா இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி சிறப்பித்தார். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வேளாண்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்)
புகைப்படங்கள் தேவை.
அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த லிங்க் மூலம் அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (044-27666555) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.இந்த எண்களை நண்பர்களுக்கும் பகிர்ந்து <<16937806>>தெரியப்படுத்துங்கள் <<>>
திருவள்ளூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சசிகந்த் செந்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) சார்பில், வட கரோலினா மாநிலம், ராலீ நகரத்தில் நடைபெறும் 38-ஆவது தமிழ் விழாவில் பங்கேற்க உள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழ் குடிகள், இளைஞர், தமிழர்கள் ஒருங்கிணைப்பு தமிழ் வளர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.
IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
அரசியலில் மறக்கமுடியாத தலைவராகவும், நடிகராகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு இன்றும் ரசிகர்கள் உள்ள நிலையில், அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக திருவள்ளூர் நாத்தமேட்டில் எம்.ஜி.ஆருக்கு கோயில் காட்டியுள்ளார் கலைவானன் என்பவர். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான கலைவானன் அவரது மனைவி கனவில் வந்து கேட்டதற்காக இந்த கோயிலை கட்டி பராமரித்து வருகிறார். ஷேர் பண்ணுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிந்து வரவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், “அரசு ஊழியர்கள் அலுவலர்கள் தலைகவசம் அணிந்து வருவதை அந்தந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வரும் அரசு ஊழியர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கபடும்” எனவும் எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள்-9498187171, ADSP ஹரிகுமார்-9840127079, திருவள்ளூர் DSP-9952935164, ஊத்துக்கோட்டை DSP-9443996868, திருத்தணி DSP-9840980338, பொன்னேரி DSP-9494100315, கும்மிடிப்பூண்டி DSP-9971395078, மதுவிலக்கு பிரிவு DSP-9003265385,குற்றப் புலனாய்பு பிரிவு DSP -443666380. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
Sorry, no posts matched your criteria.