India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அடிக்கடி ரயில்வே கேட் மூடி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் வந்த நிலையில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அப்போது பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர் உடன் இருந்தனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
திருவள்ளூர், வேப்பம்பட்டில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மாணவி மேகலா 496, லஹாரி நாராயணி 486 மற்றும் ஜெபின் ஜோஷ்வா 485 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள். 470 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். கணிதத்தில் 10 மாணவர்களும் அறிவியலில் 2 பேரும் சமூக அறிவியலில் ஒருவரும் 100/100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
பொன்னேரி அடுத்த ஆவூர் எடக்குப்பம் நுக்காளம்மன் திருக்கோயிலில் இன்று காலை கோயிலை பூசாரி திறக்க வந்தபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சாமி கழுத்திலிருந்த 2 கிராம் நகை, பீரோவில் இருந்த 2 கிராம் தங்க நகை, உண்டியல் உடைக்கப்பட்டு 5000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் காலை வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 225 அரசு பள்ளிகளில் 20 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள் உள்ளன. 14 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 20 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 80.06% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 74.24 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.85 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் 35ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 4 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் வெயிலின் வெப்பம் 98 டிகிரி தாண்டி மக்களை வாட்டி கொண்டிருந்த நிலையில் நேற்று பரவலாக பெய்த மழையால் கடந்த 2 தினங்கள் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. மேலும் 2 டிகிரி வெப்பம் குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மகிழ்ச்சி உள்ளனர். மேலும் ஆங்காங்கே மழை பெய்யும் என அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 86.52% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 82.52% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.56% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தேசிய அளவிலான 50 போட்டிகள் மே 6 முதல் 8 வரை ஆந்திர மாநிலம் ஒங்கோலில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து 12 வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி நான்காம் இடம் பிடித்துள்ளனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 5 வீரர்கள் பங்கு பெற்றனர். மாணவர்களுடன் தமிழ்நாடு 50 பால் கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இராமதாஸ் சென்றிருந்தனர்.
திருவள்ளூர் நகராட்சியில் முன்னாள் நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர் ராசகுமார். இவர் திமுக மூத்த நிர்வாகி ஆவார். திருவள்ளூரில் வசித்து வந்த இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இவரது மறைவை ஒட்டி இன்று திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.