India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
காக்களூர் அருகே உள்ள ராமாபுரம் பகுதியில் ஆவடி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கார் நிலைத்தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிறிது காயங்களுடன் உயிர்த்தப்பினார். மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்ட பைக் மீது கார் மோதியது. தகவல் அறிந்ததும் செவ்வாபேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்கள் இன்றும் , நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. ஷேர் செய்யவும்
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கும்மிடிப்பூண்டி 60மி.மீ., பொன்னேரி 29 மி.மீ., செங்குன்றம் 27.6மி.மீ., பூண்டி 25மி.மீ., திருத்தணி 23மி.மீ., ஊத்துக்கோட்டை 19மி.மீ., பூந்தமல்லி 17மி.மீ., சோழவரம் 11மி.மீ., ஆவடி 12மி.மீ தாமரைபாக்கம் 9மி.மீமழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.16.) காக்களூர் துணை மின் நிலையம், திருமழிசை துணை மின் நிலையத்தில் மின் தடை செய்யப்பட உள்ளன. இதனால், காக்களுர் தொழிற்பேட்டை, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ஈக்காடு, பெரும்பாக்கம், திருப்பாச்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், திருமழிசை,வெள்ளவேடு, நேமம், மணம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.16) தனியார்துறை வேலைவாய்ப்பு நடைபெறவுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநின்றவூரில் ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 100க்கும் அதிகமாக நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம் 15,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளன. https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சோழவரம் 24 மி.மீ. பூந்தமல்லி 18 மி.மீ. ஆவடி 16மி.மீ., தாமரைபாக்கம் 14 மி.மீ., செங்குன்றம் 13 மி.மீ., திருவள்ளூர் 9.2 மி.மீ., பொன்னேரி 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது
Sorry, no posts matched your criteria.