India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 150-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.
மீஞ்சூர்- வண்டலூர் நோக்கி செல்லும் சாலை, வழுதிகைமேடு பகுதியில் நேற்று இரு பைக்குகள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி (22), திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த சீயாம்சுந்தர் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 இளைஞர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி ஜாக் கிக் பாக்ஸிங் மையம் சார்பில் மோகன்ராஜ் தலைமையில் கிக் பாக்ஸிங் நடைபெற்றது. இதில் அம்மையார்குப்பம் அரசு பள்ளி 11ம் வகுப்பு மாணவன் பிரவீன், திருத்தணி தனியார் பள்ளி மாணவன் சீனிவாசன், பாலாபுரத்தை சேர்ந்த ஊட்டி ராணுவ கல்லூரியில் பிஏ படிக்கும் ஜனனி ஆகிய மூவரும் கிக் லைட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். இவர்களுக்கு நேற்று ரயில் நிலையத்தில் திருத்தணி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில், திருவள்ளூர் பணிமனைகளில் ஜூன் 19, 20 தேதிகளில் மேம்பாட்டு பணிகள் நடக்க இருப்பதால், இந்த மார்க்கத்தில் சில ரயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்- திருவள்ளூர் அதிகாலை 4.30 மணி, திருவள்ளூர்- சென்ட்ரல் அதிகாலை 3.30 மணி ஆகிய ரயில்கள் வரும் ஜூன் 19, 20ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அருகே வெள்ளானூரில் ரூ.80 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக தெரிகிறது. இதனை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வேண்டும் என கோரி அப்பகுதி பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஆவடி தாலுகாவில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் புகார் அளித்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று உலக கொடையாளர் குருதி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் தலைமையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரத்த தான தின உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டார்கள் மற்றும் இரத்த தானம் கொடையாளர்களை கௌரவிக்கும் வகையில் கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையினை வழங்கினார்.
போரூர் பாளையக்கார தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம்(40). இவர் இன்று(ஜூன் 15) மாலை போரூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆகாயத்தாமரை செடிகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி நித்தியானந்தத்தை சடலமாக மீட்டனர். போரூர் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 40 இடங்களை வெற்றிபெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வெற்றிக்கு உழைத்த அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் டி.தேசிங்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் ஆட்சியரகத்தில் வாராந்திர பொது விநியோக திட்ட ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜூ்ந 15ஆம் தேதிக்குள் ரேஷன் பொருட்கள் நுகர்வு செய்யப்படவும், நுகர்வு குறைவாக உள்ள ரேஷன் கடைகளை ஆய்வுசெய்து நுகர்வு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், ரேஷன் கடைகள் தொடர்பாக வரப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜூன் 14) மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.