India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 6 பேருக்கு அடுத்தடுத்து டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெங்கு உறுதியான 6 பேரில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் போலீசாரிடம் தற்போது சிக்கியுள்ளது. சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, 2020ஆம் ஆண்டு வரை இவரிடம் சம்போ செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது, மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படத்தை போலீசார் பெற்றதால், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் மாதத்தின் 2, 4ஆவது சனிக்கிழமை வேலைநாள் ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டார். 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலை நாள் அண்மையில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் நிதிஷ் 13, புஜ்ஜி ரெட்டி பள்ளி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி சென்று அரசு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய கிராமத்தில் இறங்க முயன்ற போது, திடீரென பேருந்து புறப்பட்டதால் தவறி விழுந்து தலையில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் நேற்று நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம்(YRC) சார்பில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சாந்தி தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாக பங்கேற்று போக்சோ (Pocso) என்ற எழுத்து வடிவில் நின்று உலக சாதானை படைத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே அரியதுறை கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கலசநீர் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கோபுர காலங்களுக்கும் சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,467 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 78 மில்லியன் கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,358 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 98 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 304 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.23) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, மலர்கொடி, பாஜக நிர்வாகி அஞ்சலை, ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தமான், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்ட 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் புதன்கிழமை (ஆக.23-28) வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, இன்று மற்றும் நாளை (வெள்ளி, சனிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து,18 வயது நிரம்பியோர், முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம் சேமிப்பு பத்திரத்தின் அசல், நகலுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் மாவட்ட சமூக நல அலுவகத்தை நேரிலோ, 044 29896049 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.