India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு 200 மீட்டருக்கு அப்பால் செய்தியாளர்கள் நிறுத்தப்பட்டதால், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் 68.31% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக திமுக சார்பில் சசிகாந்த் செந்திலும் (காங்), அதிமுக சார்பில் நல்ல தம்பியும் (தேமுதிக), பாஜக சார்பில் பாலகணபதியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News-உடன் இணைந்திருங்கள்.
ஜூன் 3 திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா சிறப்பு வழியில் ஆபத் சகாய விநாயகர், சண்முகர் ,மூலவர் ,வள்ளி தெய்வயானை மற்றும் உற்சவர் ஆகிய சன்னதிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தேர்தலில் வெற்றி பெறவும் மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வேண்டும் என சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டார். தொடர்ந்து ரோஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் மலர்கள் வழங்கப்பட்டது.
2019இல் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக-காங் சார்பில் போட்டியிட்ட கே. ஜெயக்குமார், 25.44% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பி. வேணுகோபால், 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக- காங் சார்பில் சசிகாந்த் செந்தில், அதிமுக சார்பில் நல்ல தம்பியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 3) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை உடனே தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101வது பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக பதவியில் இருந்து வந்த ஆவடி நாசர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தகத்தை வழங்கினார்.
திருத்தணி, திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு பயிரிட்டு பதிவு செய்யாத விவசாயிகளை தொடர்புகொண்டு கரும்பு ஆலையின் அலுவலர் பதிவு செய்துவருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடிக்கு இதுவரை பதிவுசெய்யாத விவசாயிகள் பதிவு செய்யலாம் என நேற்று திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். விவரங்கள் பெற 9943966322 என்ற எண்ணை தொடர்புகொள்க.
திருத்தணி மலைமீது முருகன் கோயில் உள்ளது. விநாயகர், சண்முகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய உற்சவ முருகர், மூலவர் முருகர் தனி தனி சன்னதிகள் உள்ளன. இதில் மூலவர் முருகன் சன்னதியில் மட்டும் குளிர்சாதன வசதி உள்ளது. மற்ற சன்னதிகளில் பக்தர்கள் அதிகமாக வரும்போது கோடை வெயிலில் பக்தர்களுக்கு புழுக்கம் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். மற்ற சன்னதிகளுக்கும் குளிர்சாதனம் வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
திருத்தணி காந்தி ரோடு பகுதியில் நாகாலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சுற்றுச்சுவர் மற்றும் கோவில் பராமரிப்பு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இக்கோயிலில் நேற்று கணபதி ஹோமத்துடன் நவ கலச பூஜை நடைபெற்றது. பின்னர் இன்று காலை நாகாலம்மன் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவமி தரிசனம் செய்தனர்.
புழல், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவரது மகன் ஜெரால்டு (12). நேற்று ஜெரால்டு வீட்டுக்கு வெளியே வந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து நாய் ஒன்று அவரை துரத்தி கடித்தது. இதில் ஜெரால்டு-விற்கு முகம், காது, மூக்கு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. அவனை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்தனர். புகாரின் பேரில் புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.