India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் நடைபெறும் மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் ஜூலை 7, 24, 31 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாம்கள் ரத்து செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று தெரிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் வண்டி பாதை ஆக்கிரமிப்பை அகற்றும் நிகழ்வில் ராஜ்குமார் என்பவர் தீக்குளித்து சென்னை கேஎம்சி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, எளாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரியும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் வழிகாட்டி செவிலியர்களுக்கான தாய்ச்சேய் நலம் பராமரிப்பு பற்றிய, ஒரு நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து கருத்துரை வழங்கினார்கள். உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா ஆகியோர் உடனிருந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பயிர் காப்பீடு திட்டம் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற காப்பீடு நிறுவனத்தில் செலுத்தப்பட உள்ளது, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்திற்கு நடப்பு 2024 மற்றும் 25ஆம் ஆண்டிற்கான சம்பா மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு, காப்பீடு தொகையினை செப்டம்பர் 16ஆம் தேதி வரை செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் நரிக்குறவர்கள் பயனாளிகளாக நேர்காணலில் நேற்று கலந்துகொண்டார்கள். உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 446, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஏரிகளில், களிமண் மற்றும் வண்டல் மண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி விவசாயம் மண்பாண்ட தொழில், வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும் என ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஒருமையில் பேசியதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை கண்டித்து கடந்த 1ஆம் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகின்றனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் இதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. போராட்டம் தொடரும் என இன்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கம், புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் மொத்த கொள்ளளவு 13.222டிஎம்சி இதில் 5.92 டிஎம்சி கொள்ளளவு கையிருப்பு உள்ளது. 6 மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்துவருவதால் புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு பின்வருமாறு: ஆவடியில் 56 மி.மீ, திருத்தணியில் 48 மி.மீ, சோழபுரத்தில் 42 மி.மீ, செங்குன்றத்தில் 37 மி.மீ, கும்மிடிப்பூண்டியில் 30 மி.மீ, திருவள்ளூரில் 27 மி.மீ, பள்ளிப்பட்டில் 25 மி.மீ, பூந்தமல்லியில் 22 மி.மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்த மழையின் அளவு 451 மி.மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.