India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை ஜூலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு கொண்டு வருகிறது. இந்த நிலையில், திருத்தணியில் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதை கண்டித்தும், சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் நீதிமன்ற நுழைவாயில் பகுதியில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி காவல் நிலைய பகுதிக்குட்பட்ட ஆவடி டேங்க் பேக்டரி, முத்தாபுதுப்பேட்டை, மாங்காடு ஆகிய பகுதிகளில் சமீபத்தில் பல்வேறு வழக்குகளில் திருடுபோன சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள், 36 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டது. அதனை நேற்று (ஜூன்.19) ஆணையர் கி.சங்கர் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் ஒப்படைத்தார். இதில் துணை ஆணையர்கள் ஜெயலட்சுமி, பெருமாள் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூன்.19) நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் கி.சங்கர் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து, புகார்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் ஜெயலட்சுமி, பெருமாள் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் இன்று (19/06/2024) பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று(ஜூன் 19) காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூரில் அதிகபட்சமாக 63 மி.மீ, திருத்தணி – 51 மி.மீ, செங்குன்றம் – 42 மி.மீ, ஆர்.கே.பேட்டை – 39 மி.மீ, தாமரைப்பாக்கம் – 38 மி.மீ, திருவேலங்காடு – 28 மி.மீ மற்றும் ஆவடியில் 20 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 346 மி.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கும்மிடிப்பூண்டி, ஆரணி, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, திருத்தணி, மணவாளன் நகர், பெரியபாளையம், வெங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் உரிய முறையில் உள்ளூர் காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்குமாறு, திருவள்ளூர் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர், சின்ன ஈக்காடு பகுதியில் தீப்பாச்சி அம்மன் கிராம தேவதை கோவில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு கோயில் நிர்வாகி மதன் முறைப்படி கோவிலை பூட்டி சென்றுள்ளார். தொடர்ந்து இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ரொக்கம் மற்றும் நகைகள் என 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் புல்லரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன்(30). இவர் மதுரவாயல் பகுதி உறவினர் வீட்டில் 2 மாதமாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூன்.17) பூந்தமல்லி அருகே மேட்டுக்குப்பம் சாலையில் ஹர்ஷவர்த்தன் வந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ஹர்ஷவர்த்தனை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.