India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு ரூ.25,000 – 35,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
திருவள்ளூர், திருநின்றவூர் & பேரம்பாக்கம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற உள்ளது. இதனால், பேரம்பாக்கம், களாம்பாக்கம், கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம், மப்பேடு, இளஞ்சேரி, கொட்டையூர், நெமிலிச்சேரி, பாலாஜி நகர், ராஜாங்குப்பம், கொசவன்பாளையம், வேப்பம்பட்டு, புட்லூர் & அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்.கே பேட்டை, பூந்தமல்லி, சோழவரம், கடம்பத்தூர், திருத்தணி, புழல் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 11 ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் தினசரி பயணியர் மற்றும் நீண்ட துார பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே திருவள்ளூர் ரயில் நிலையத்தில், கோவை, பிருந்தாவன், இன்டர்சிட்டி, லால்பாக், லோகமான்ய திலக் டெர்மினஸ், கச்சேகுடா, நீலகிரி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய ஒன்பது விரைவு ரயில்களும் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதவித்தொகை என்ற பெயரில் வரும் பொய்யான குறுஞ்செய்திகளை நம்பி அதிலுள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட காவல் துறை தனது சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. மேலும் பண இழப்பு தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஷேர் பண்ணுங்க.
திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ளது திருக்கச்சி நம்பிகள் சமேத வரத ராஜ பெருமாள் கோயில். வைணவர்களில் முக்கியமான நபரான ராமானுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகளுக்கு பெருமாள் மீது இருந்த பக்தி காரணமாக ஏழரை வருடங்கள் பிடிக்க வேண்டிய சனி ஏழரை நாழிகையில் விலகிச் சென்றது. சனி தோஷத்தை பக்தியால் வென்றவர் என்பதால், இங்கு சென்று வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
திருவள்ளூரில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. <
புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றாலோ (அ) உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் இந்த தளத்திலே புகார் அளிக்கலாம். முதலில் உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும். உங்கள் தொலைபேசி எண் & E-mail முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில் மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை (அ) மின்னணு அட்டை குடும்ப விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பதை தேர்வு செய்து புகாரை அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!
திருவள்ளூரைச் சேர்ந்த திவ்யா கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். டி.பி.சத்திரம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தந்தை பணிச்சுமை காரணமாகதான் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.