India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (57), தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 22ஆம் தேதி பணிக்கு சென்றவர் நேற்று முன்தினம் மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றபோது இறந்துவிட்டார். இதையடுத்து, தொழிற்சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
திருத்தணி, சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் சுவாதி – பிரித்திவிராஜ் தம்பதியினர். இவர்களுக்கு 2 மாதமான பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு நேற்று (மார்.25) தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியம் திருத்தலத்தில் மாசி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இத்தலத்தில் மூலவர் முருகன், காலை பாலனாக, நண்பகல் வாலிபனாக, மாலை வயோதிகனாக காட்சி தருவது சிறப்பாகும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த முருகன் (41) என்பவர், தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2019ல் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முருகன் மீது திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு நீதிபதி, முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருவள்ளூர், பொதட்டூர்பேட்டை நடுத்தெருவில் வசிப்பவர் முருகன் வயது 37 தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் ஆர்கே பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் POCSO நீதிமன்றத்தில் நீதிபதி சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பளித்தார்.
திருத்தணி, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள குன்னத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் பின்னால் வந்த பிரகாஸ் என்பவரின் கார் அரசு பேருந்து மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதமான நிலையில் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.