India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் சிறுபான்மையினர் மாணவ மாணவிகளிடம் இருந்து வெளிநாட்டில் பல்கலைக்கழகங்களில் பயில 2025- 2026 ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக் www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து ஆணையர் சிறுபான்மையினர் நலத்துறை சேப்பாக்கம் சென்னை என்ற முகவரிக்கு அக். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE

வளசரவாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம்(49) என்பவரை போரூரை சேர்ந்த ரவுடி அஸ்வந்த்(30) கடந்த 2022ம் ஆண்டு தாக்கி கொலை முயற்ச்சியில் ஈடுப்பட்டார். வளசரவாக்கம் போலீசார் அஸ்வந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அஸ்வந்த் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

திருவள்ளூர் மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <

திருவள்ளூர் மாவட்டடத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், அண்டை மாவட்டங்களிலும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையா இருங்க. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்த அன்பழகன்(30). இவர் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி தனது வீட்டின் அருகே 16 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கினார். இந்த வழக்கில் குற்றவாளி அன்பழகனுக்கு 28 ½ ஆண்டு சிறை தண்டனை, 28 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளுர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (14.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரர்களின் விவரங்கள் காவல் நிலையம் வாரியாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் அவசர நிலைகளில் அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரிகளை எளிதில் தொடர்புகொள்ளலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை எனவும் கூறப்பட்டது.

தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள்,<

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.