India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்.16) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, ‘<

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். நாளை (அக்.16) மாவட்ட மருத்துவ அலுவலர் தலைமையில் நடத்தப்படும். இம்முகாம் நடக்கும் பகுதிகள் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (15.10.2025) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகள் கேட்டு உடனடி தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லோகநாதன். இவரது வீடு காஞ்சிபுரத்தில் செவிலிமேடு பகுதியில் உள்ளது. அண்மையில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்ததில் ரூ.1.24 பணத்தை கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் தற்போது காஞ்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறையின் உத்தரவின் பேரில் லோகநாதன் வீட்டில் சோதனை மேற்கண்ட போது கணக்கில் வராத ரூ.84,000 பணத்தைபறிமுதல் செய்தனர்.

திருவள்ளுர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் மாதம் முதல் புதன்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று மற்றும் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுகிறது. மாதத்தின் முதல் புதன்கிழமை திருவள்ளுர், இரண்டாம் புதன்கிழமை திருத்தணி, மூன்றாம் புதன் கிழமை பொன்னேரி, நான்காம் புதன் கிழமை ஆவடி ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள்<

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, திருவள்ளூர் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.
Sorry, no posts matched your criteria.