Thiruvallur

News October 27, 2024

திருவள்ளூரில் ரேஷன் கடைகள் வழக்கம்போல் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 26, 2024

திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவைகள் ரத்து

image

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து, சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும்.

News October 26, 2024

தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் தங்களது உரிமத்தை, வரும் 31ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக தொழிற்சாலை உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கானகட்டணத்தை www.dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும் என அறிவிப்பு

News October 26, 2024

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

image

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில், இன்று காலை தனியார் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, சிறப்புரை ஆற்றி, பேரணியை துவக்கி வைத்தார். உடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News October 26, 2024

நெல் முட்டை ஏற்றி சென்று லாரி கவிழ்ந்து விபத்து

image

சூளூர்பேட்டையில் இருந்து நேற்று செங்குன்றத்திற்கு சுமார் 30 டன் நெல் மூட்டைகளை ஏற்றுக்கொண்டு வந்து கொண்டு இருந்தது . அப்போது சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் கும்மடிபூண்டி அருகே உள்ள மேம்பாலத்தில் லாரி ஏறி செல்லும் போது, பாரம் தாங்காமல் நெல்மூட்டைகள் ஒரு பக்கமாக சரிந்த நிலையில், கட்டுபாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 25, 2024

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூர், அக்.01ஆம் தேதி முதல் அக்.30ஆம் வரை நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9840756210/ 9444017528 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

News October 25, 2024

திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பதவிக்கு பணியிடம் 1 மட்டும் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு அடிப்படைத்தகுதி SSLC தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 25, 2024

திருவள்ளூர் எம்.பி. எச்சரிக்கை

image

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: RSS அமைப்பின் மாணவர் பிரிவான ABVP தலைவர் சவீதா ராஜேஷை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக ஆளுநர் ஆர்என் ரவி நியமித்திருப்பதன் மூலம் கல்வி கூடத்தை காவிக் கூடமாக்கி மாணவர்கள் மத்தியில் சாதி மத கலவரங்களை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இந்த நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

News October 25, 2024

சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் சென்னை லஞ்ச ஒழிப்–புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. இதனையடுத்து பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 2 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர்.

News October 25, 2024

பூந்தமல்லி நகராட்சியில் ரூ.2 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல்

image

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சோதனையை துவங்கி நேற்று அதிகாலை 3 மணிக்கு முடித்தனர். இதில், கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.