Thiruvallur

News October 2, 2024

திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 2, 2024

திருவள்ளூர் அருகே அரிவாளால் வெட்டு; 6 பேர் கைது

image

தோட்டக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரகு. அவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இவர்களது மருமகள் அர்ச்சனா. இவர்கள் அனைவரையும் 5 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவு இவர்களது வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக வெட்டினர்.இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை தேடி வந்தனர்.இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

News October 2, 2024

திருவள்ளூர் அருகே மின் உற்பத்தி பாதிப்பு

image

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ளது அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இங்கு இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள மூன்று அலகுகளின் தலா 21 0வீதம் 650 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று இரண்டாவது அலகில் கொதிகலன்களில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்

News October 2, 2024

திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ் வளர்ச்சி துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவரது மறைவுக்கு பின்னர் ரூ.3000 உதவி தொகை வழங்கப்படுகிறது.திருவள்ளூரை சார்ந்த வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் மாவட்ட அலுவலகத்திலோ அல்லது ww.tamilvalarchithurai.tn.gov.in-ல் விண்ணப்பத்தை பதிவிறக்கி அக்டோபர் 31-க்குள் அனுப்ப வேண்டும்.

News October 1, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 1, 2024

திருவள்ளூர் அருகே இளைஞர் மீது பாய்ந்த போக்ஸோ

image

திருத்தணி பட்டாபிராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய பெருமாள் என்பவரின் மகன் சரவெடி சரத் என்கிற சரத்குமார் (28). திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் ஆறாம் வகுப்பு படித்தவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அவரது தந்தையிடம் கூறினார். தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர்

News October 1, 2024

திருவள்ளூர்:நாளை அனைத்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும்

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்
நாளை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை டாஸ்மாக் விற்பனை கடைகள் மற்றும் இதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், ஹோட்டல்கள் போன்றவற்றை கண்டிப்பாக மூட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

News September 30, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 30, 2024

திருவள்ளூர் காவல்துறை அறிவுறுத்தல்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை திருவள்ளூர் சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் இன்ஸ்டாகிராம், டெலெக்ராம், போன்ற சமூக வலைதளங்களில் Privacy Setting யை. பயன்படுத்துங்கள் எனவும், இதன் மூலம் தங்களது விவரங்கள் பாதுகாக்கப்படும். மற்றவர்கள் தங்களின் விவரங்களை பார்ப்பது தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

News September 30, 2024

திருவள்ளூர் அருகே 3 பேருக்கு சரமாரி வெட்டு

image

மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு, பெருமாள் கோயிலை சேர்ந்தவர் ரகு. இவரது மனைவி ஜெயபாரதி, மருமகள் அர்ச்சனா. இன்று அதிகாலை 1மணியளவில் 5 பேர் கும்பல் வீட்டின் கதவை தட்டி உள்ளே புகுந்து அரிவாளால் ரகு, அவரது மனைவி ஜெயபாரதி, மருமகள் அர்ச்சனா ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேர் ஸ்டான்லி அனுமதிக்கப்பட்டு மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!