India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர், அவரச எண் 100 மூலம் பேசிய மர்ம நபர் ஒருவர் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி & துரைநல்லூர் துணைமின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. திருமழிசை, சிட்கோ தொழிற்பேட்டை, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, உடையார்கோயில், பிராயம்பத்து, கொத்தியம்பாக்கம், பாரிவாக்கம், சோம்பட்டு, பணப்பாக்கம், துரைநல்லூர், ராளம்பாடி &அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!
திருவள்ளூர் மாவட்டத்தில், மழைக்காலம் தொடங்கிவிட்டதால், நீர்நிலைகளில் குழந்தைகள் குளிப்பதையோ, விளையாடுவதையோ தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. நீர்நிலைகளின் அருகில் குழந்தைகளை தனியே விட வேண்டாம் எனவும், பாதுகாப்பில் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
பூந்தமல்லி, நசரத்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் மிரட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்தும், நகைகளைப் பறித்தும் சென்ற வழக்கில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அஜய்குமார், கொள்ளையடித்த நகைகளை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் நிலம் தொடர்பாக 51 மனுக்கள் சமூக பாதுகாப்பு திட்டம்-54, வேலைவாய்ப்பு-58, பசுமை வீடு, அடிப்படை வசதி-87 & இதரதுறை-159 என மொத்தம் 409 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட 12 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. PG டிகிரி + B.Ed முடித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 1800 425 6753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். <
திருவள்ளூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியிலோ (அ) இந்த <
வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 12) திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளார். உத்தரவை மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.