India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
திருவள்ளூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். 14 ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 526 ஊராட்சிகளில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதம் நடைபெறும்.
ஆவடி காவல் ஆணையரத்திற்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடூமை செய்த வழக்கில் வினோத் என்பவரை பட்டாபிராம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இன்று 17.09.2025 வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 35 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(செப்.18) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
2025-ஆம் ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம், செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு, மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளிலும் (Centre Median), தற்காலிகமாக எந்தவிதமான கொடிகளும் அமைக்கப்படாமல் கண்காணிக்க வேண்டும் எனவும், மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ், 2.வருமான சான்றிதழ், 3.முதல் பட்டதாரி சான்றிதழ், 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ், 5.விவசாய வருமான சான்றிதழ், 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ், 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற<
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை திட்டத்தை ரூ.3.56 கோடி செலவில் விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் வளர்ந்து வரும் சென்னை புறநகர் பகுதிகள் பயன்பெறும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 58 கி.மீ., துாரம் உடைய இப்புதிய ரயில் பாதைக்கு, தனியாரிடமிருந்து, 229 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது.
திருவள்ளூர், திருமழிசையில் அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கரிகாலப்பெருவளத்தானின் வெட்டிய கையை மீண்டும் பொருத்தியதால் இவர் கைதந்தபிரான் என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் வந்து வழிப்பாட்டால் மன நிம்மதி கிடைக்குமாம். இக்காலத்தில் மன நிம்மதி தானே முக்கியம். தனக்காவும் குடும்பத்திற்காகவும் ஓடி ஓடி உழைப்பவர்கள் இங்கு ஒரு நாள் சென்று மன அமைதியை பெறலாம். *நண்பர்களுக்கும் பகிருங்கள்*
Sorry, no posts matched your criteria.