India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சித் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது அரசுப் பணியை மேற்கொள்ள லஞ்சமாக பணம் கேட்டால் 0423-2443962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது dspvacooty@gmail.com, dspnigdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல்களிலும் மக்கள் புகார்களை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக நீட்ஸ் எனப்படும் மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் தொடங்குபவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8925533996,8925533997 அல்லது 0423-2443947 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்.

நீலகிரி: கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் செல்போனிலும், இரவில் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மூழ்கி உள்ளனர். இதனால் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல், படிப்பு மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பெற்றோர்கள் கண்காணித்து பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என நீலகிரியை சேர்ந்த கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

▶️மாவட்ட ஆட்சியர்:0423-2442344
▶️மாவட்ட வருவாய் அலுவலர்:0423-2441233
▶️திட்ட இயக்குநர், சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்:0423-2443805
▶️திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை:0423-2442053
▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது):0423-2444012
▶️உதவி ஆணையர் (ஆயம்):0423-2443693
▶️திட்ட அலுவலர், மகளீர் திட்டம்:0423-2444430
▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்:0423-2444004

நீலகிரி: கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(58). இவர், மாக்குமூலா பகுதியில் பாகற்காய் விவசாயம் செய்து வந்துள்ளார். அவரது தோட்டத்திற்குள் வன விலங்குகள் வருவதைத் தடுக்க மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், நேற்றைய முன் தினம் காலை அதே மின் வேலியில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஊட்டியில் உள்ள விடுதிகள் தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகள் குறித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் எளிதில் புகார் தெரிவிக்க ஏதுவாக பிரத்யேகப் தொலைபேசி எண், இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும் என தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். வணிக நோக்கத்துக்காக வீடுகளை விடுதியாக மாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினர்.

கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டி செல்ல கூடுதல் வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோடை விழாவின் போது தேவை உருவாகும்பட்சத்தில் ஊட்டிக்கு செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் அமைந்துள்ள தென் கைலாய மலை கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.

நீலகிரி: இந்தியா துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்றுஏப்.26) முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார். இதற்காக ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதிக்கு சென்று, அங்கிருந்து கார் மூலம் முதுமலை செல்கிறார். இதனால், இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முதுமலையில் உள்ள தெப்பக்காடு முகாமில் வாகன சுற்றுலா நிறுத்தப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு மேல் வழக்கமாக செயல்படும்.

நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க இன்று வருகைபுரிந்த, இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு நிறைவுக்கு பின், உதகையில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு சென்று அவர்களை சந்தித்து, பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்தார்.
Sorry, no posts matched your criteria.