India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்களில் முதியோர்கள் சரியாக கவனிக்கப்படுகிறார்களா? அடிப்படை வசதிகள் உள்ளனவா? போன்றவற்றை அறிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று உதகை அருகே முள்ளிக்கொரையில் உள்ள அன்பு அறிவு அறக்கட்டளை இல்லத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
நீலகிரி மாவட்டம், உதகை, நஞ்சநாடு அருகே குருத்துக்குளி கிராமத்தில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. லட்சுமணன், சிவா குழுவினரின் பஜனை நடைபெற்றது. திருமதி ஜானகி போஜன் பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார். குருத்துக்குளி ஊர் தலைவர் எஸ்.ராமன் தனது 94 வயதில் குழந்தைகளுடன் பாடலுக்கு நடனமாடினார். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. வானவேடிக்கை நடந்தது. ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் அதிகமாக உள்ள நிலையில் தொலைதொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்றத்தின் சந்தாதாரர்கள் தவிப்புடன் உள்ள நிலை, மழை காலங்களில் பாதிப்பு குறித்தும் தகவல் பரிமாற முடியாத நிலை தொடர்வதால், உடனடியாக மாவட்டத்தில் BSNL சேவையை சிக்கலின்றி தொடர நடவடிக்கை அவசியம் என பொதுமக்கள் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையில் கோரிக்கை வைத்துள்ளனர்.
குன்னூர் வெலிங்டன் பகுதியில் கடந்த வாரம் வாடகை கார் மீது ராட்சத மரம் விழுந்து ஜாகீர் உசேன் என்ற ஓட்டுனர் அதே இடத்தில் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து ராணுவ நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அப்பகுதியில் 206 ஆபத்தான மரங்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, அவைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.
நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கம் சார்பில், மேட்டுப்பாளையம் ஏல மண்டியில் இன்று ஊட்டி உருளைக்கிழங்கு ஏலம் நடைபெற்றது. இதில் ராசி வகை உருளைக்கிழங்கு மூட்டைக்கு அதிகப்பட்சமாக ரூ.2,330க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,430க்கும் ஏலம் போனது. பொடி உருளைக்கிழங்கு அதிகப்பட்சமாக ரூ.1,060க்கும், குறைந்தபட்சமாக ரூ.500க்கும் ஏலம் போனது. 1700 மூட்டை உருளைக்கிழங்கு இன்றைய ஏல விற்பனைக்கு வந்தது.
கூடலூர் தொரப்பள்ளி அருகே குனியல் வயல் பகுதி விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். யானைகளிடமிருந்து நெல் விவசாயத்தை பாதுகாக்க இரவு முழுவதும் விவசாயிகளும், வனத்துறையினரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்கு வராத யானைகள் இன்றைய தினம் அதிகாலை 6 மணி அளவில் விவசாய நிலத்திற்கு புகுந்து நெல் பயிர்களை சேதப்படுத்தியது.
கடந்த செப்டம்பர் வரை உள்ள புள்ளிவிவரத்தின்படி கோவையில் 25 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் 12,000க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 495 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் நாய் கடி பாதிப்பு குறைவாக இருப்பதற்கு உலகளாவிய கால்நடை மருத்துவ நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) <
தேவர்சோலை பேரூராட்சி மச்சிகொல்லி பகுதியில் வசித்து வரும் சுமார் 80 குடும்பங்களின் நிலங்களை வனத்துறை காப்புகாடாக அறிவித்தது. இந்நிலையில், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு இதே பகுதியில் நிரந்தரமாக வாழ்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களுக்கு அரசின் மூலமாக வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரை பேரூர் துணைத் தலைவர் யுனஷ்பாபு தலைமையில் சந்தித்து மனு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.