Thenilgiris

News August 8, 2025

குடியிருப்பு கட்டிட பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சிப்பகுதியில் வடவயல் பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நகர் குடியிருப்புக்கான கட்டட மற்றும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 8, 2025

நீலகிரி: 8th போதும் அரசு வேலை!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு போதுமானது, எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 8, 2025

நீலகிரி: மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி!

image

தமிழ்நாடு கல்வி கடன் திட்டம் கீழ் சிறுபான்மையின மாணவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

நீலகிரி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

நீலகிரி: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க

நீலகிரி – 9445000258

உதகமண்டலம் – 9445000259

குன்னூர் – 9445000260

கோத்தகிரி – 9445000261

குந்தா – 9445000263

கூடலூர் – 9445000262

பந்தலூர் – 9445000264 SHARE பண்ணுங்க!

News August 7, 2025

நீலகிரியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 7, 2025

உதகையில் நடைபெற்ற தேசிய கைத்தறி விழா

image

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், கைத்தறி துறை சார்பாக 11ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற கைத்தறி விற்பனை கண்காட்சியினை, மாவட்ட ஆட்சியினர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இன்று ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சி.எச்.198 தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 7, 2025

இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

image

தேவர் சோலை பேரூராட்சி பாடந்துறை பகுதியில் மக்கள் உரிமை குரல் என்ற வாட்ஸ்அப் குழுவின் ஒருங்கிணைப்பில் இப்பகுதி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்று, தேவர் சோலை பேரூராட்சியில் நிலவிவரும் யானை, புலி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

News August 7, 2025

நீலகிரி: SBI வங்கியில் வேலை வேண்டுமா?

image

நீலகிரி மக்களே..SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 7, 2025

நீலகிரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே (ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

News August 7, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில், இன்று (ஆகஸ்ட் 6, 2025) இரவு ரோந்துப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், உதகை ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களைப் பொதுமக்கள் அவசர உதவிக்கு அணுகலாம்.

error: Content is protected !!