India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குந்தா அருகே உள்ள எடக்காடு கிராமத்தில் கூலி வேலை செய்து வரும் தொழிலாளி சதீஷ் (32) நேற்று வனவிலங்கு தாக்கி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு வனத்துறை அரசு நிவாரண நிதி வழங்க உள்ள நிலையில், நேற்று முதல்கட்டமாக அவரது மனைவி சங்கீதாவிடம் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் மணிமாறன் வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (04.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கை பெறுகின்றன. இந்த நிலையில் கோவை சரகத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பொது இடங்களில் மக்களின் பங்களிப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நீலகிரியில் மட்டும் 366 கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாக எஸ்பி நிஷா தெரிவித்தார்.

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் நலன் கருதி தினசரி நடத்தும் ஏலத்தின் மூலம் ஊட்டி உருளை கிழங்கிற்கு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இன்று நடந்த ஏலத்தில் முதல் ரகம் அதிக பட்சமாக ஒரு மூட்டை ரூ.1820 க்கும், குறைந்தபட்சமாக ரூ.1330 க்கும் விற்பனையானது. இன்றைய ஏலத்திற்கு 1750 மூட்டை வந்தன.

குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கை பெறுகின்றன. இந்த நிலையில் கோவை சரகத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் பொது இடங்களில் மக்களின் பங்களிப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நீலகிரியில் மட்டும் 366 கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாக எஸ்பி நிஷா தெரிவித்தார்.

ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் தோட்டக்கலை துறை பராமரித்து வரும் பூங்கா செயல்பட்டு வரும் நிலையில், வாகன நெரிசலை தவிர்க்க, விரிவாக்கப்படுகிறது. இந்த விரிவாக்கத்தில், ‘பூங்காவிற்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் விரிவு படுத்த வேண்டும்’ என நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.

குன்னூர் அருகே குரும்பாடி புதுகுகாடு அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியின் மேல் பகுதியில் உள்ள நிலத்தில் பொக்லைன் பயன்படுத்தி, விதிகளை மீறி மரங்களை வெட்டி தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் மலையின் கீழ்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து கூடலூர் காந்தி திடலில் சட்டப் பேரவை உறுப்பினர் பொன்.ஜெயசீலன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். மா.செ. கப்பச்சி வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். போராட்டத்துக்கு கூடலூா் நகர அதிமுக செயலாளா் செய்யது, ஒன்றியச் செயலாளா் பத்மநாபன் முன்னிலை ஆகியோர் வகித்தனர்.

ஊட்டி அருகே இத்தலார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் வீட்டில் தீமூட்டி குளிர் காய்ந்துள்ளார். வீட்டில் இவரது மனைவி புவனா (28), மகள் தியாஸ்ரீ (4), உறவினர்கள் சாந்தா (59), ஈஸ்வரி (57) ஆகியோர் தங்கியிருந்தனர். புகைமூட்டத்தில் வீட்டில் அனைவரும் மயங்கினர். இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஜெயப்பிரகாஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (03.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.