India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலை தோட்ட காய்கறிகளான, கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்டவை, மேட்டுப்பாளையம், சென்னை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ஒன்று 60 ரூபாயிலிருந்து 4 நாட்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு,35 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.5 முதல் 20 ரூபாய் வரை வீழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நீலகிரி தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணிக்கொரை கிராம சமுதாய கூடத்தில் இன்று (10.1.25) மாலை 3.30 மணிக்கு ‘ஊரை தேடி காவலர்’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதை கிராம மக்களின் நலன் கருதி நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தொடங்கி வைக்கிறார். இதை எஸ்பி அலுவலகம் அறிவித்துள்ளது.
கூடலூர் கோழிகோடு சாலை, குடோன் அருகே, பாண்டியார் டான் டீ சரகம் 3பி பகுதியில் செயல்பட்டு வரும், ரேஷன் கடையை, நள்ளிரவில் 11.30 மணிக்கு, குட்டியுடன் நுழைந்த இரண்டு காட்டு யானைகள், ஜன்னல் கதவை சேதப்படுத்தி, இரும்பு டேபிளை வெளியே தூக்கி வீசி, அங்கு இருந்த பொருட்களை சேதம் படுத்தி உள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர்.
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை பொது இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். தற்போது பிளாஸ்டிக் செயற்கை இலையால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் டியூப், ரசாயனம் கலந்த பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவித்துள்ளன.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கான செலவினத்தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், “எச்எம்பிவி தொற்று, சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளுடன் முதன்மையாக குழந்தைகளையும், வயதானவர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது. ஆனால் பயப்படத் தேவையில்லை. மருத்துவ உதவிக்கு 93423 30053 மற்றும் 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
ஊட்டியில் தொடரும் உறைபனியால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளான காந்தல், தலைகுந்தா, சாண்டினல்லா பகுதிகளில், ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தென்பட்டது. அதேபோல், அவலாஞ்சியில் மைனஸ்-1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குச் சென்றது. ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில், மலை காய்கறி தோட்டத்தில் கேரட் தொழிலாளர்கள் வெம்மை ஆடைகளை அணிந்து உறைபனியிலும் பணி செய்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை எச்பிஎஃப் பகுதியில் புலியின் நடமாட்டம் தென்படுவதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். எனவே அப்பகுதி மக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறும் வாகனத்தில் செல்பவர்களும் நிறுத்தி இறங்குபவர்களும் மிகவும் பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு 2024-2025 மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளன. இதில் வரும் 21ஆம் தேதி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 22ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான போட்டி ஊட்டி அரசு கல்லூரியிலும் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.