India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடலூர் வன கோட்டம், பந்தலூர் வனச்சரகத்திற்குட்பட்ட, பந்தலூர் பிரிவு பாரி அக்ரோ தேயிலை தோட்டப் பகுதியில், சிறுத்தை ஒன்று அழிகிய நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து, அந்த பகுதிக்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தையை, தணிக்கை வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், கால்நடை மருத்துவர் உடற்கூறாய்வு செய்து, அப்பகுதியில் எரியூட்டினர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும், சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிய வேண்டும் என, பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், முக கவசம் அணிய, ஆட்சியர் உத்தரவிட்டு உள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நிர்வாகம், பூங்கா நுழைவாயிலில், மாஸ்க் தொடர்பாக அறிவிப்பு செய்து, ஒட்டி உள்ளது.
சென்னை உணவுத் திருவிழாவில் நீலகிரி சார்பாக பங்கேற்ற கோத்தகிரி பகுதியில் உள்ள கோத்தர் இன பழங்குடி மக்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களின் கைவினைப் பொருட்கள் ஆன மண்பாண்டத்தை நினைவு பரிசாக வழங்கினர். கோத்தர் இன மக்கள் மண்பாண்டங்களில் படையல் இட்டு புத்தாண்டை தொடங்குவர் என்பது அவர்களின் பாரம்பரிய பழக்கம்.
நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனது அலுவலகத்தில் துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் டம்ளர் முக்கு பயணியர் நிழற்குடையை திறந்து வைக்கிறார், நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்கிறார், மஞ்சனகொரை பகுதியில் உள்ள இலவச ஆம்புலன்ஸ் வழங்கி ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வை துவக்கி வைக்க உள்ளார்
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பாக ஏதேனும் புகாரில் இருப்பின் பொதுமக்கள் மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் 04232441216, தனி வட்டாட்சியர் (குடிமை பொருள்) ஊட்டி 9445000259, குந்தா வட்ட வழங்கல் அலுவலர் 9445000263, கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் 7904497671, குன்னூர் வட்ட வழங்கல் அலுவலர் 9585849991 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்த நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆலோசனை நடத்தினார். கூடலூர் தொகுதியில் நீண்ட காலமாக இருந்துவரும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் எம்எல்ஏ திராவிட மணி, பரமேஷ் குமார், அம்சா, வாசு, சகாதேவன், புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதுமலை, கர்நாடகா பந்திப்பூர், கேரளா மானந்தவாடி பகுதிகள் இணையும் இடத்தில், தாயை பிரிந்த யானை குட்டி, வழி தெரியாமல் தடுமாறியது. இந்த நிலையில் நேற்று மதியம் தாயை பிரிந்த நிலையில் வெளி வந்த குட்டி வழி தடுமாறி நின்றது. உடனே வனத்துறை சம்பவ இடத்திற்கு சென்று குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளனர்.
கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய, கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேற்கு மண்டல காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக ஆனந்தகுமார் புதிதாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கரும்பு கட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பாண்டியாறு குடோன் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கரும்பு கட்டுகள் ரேஷன் கடைக்குள் வைக்கப்பட்டு இருந்தன. இதை தேடி வந்த காட்டு யானைகள் கடையை உடைத்து அத்தியாவசிய பொருட்களை அள்ளி தின்று விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (10.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.