Thenilgiris

News January 20, 2025

நடைபாதை பெட்டிக்கடைகளை அகற்ற உத்தரவு

image

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்கா அருகே நடைபாதையில் தடையாக உள்ள பெட்டி கடைகளை, வியாபாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ”நடைப்பாதையை ஆக்கிரமித்து, பயணிகள் நடமாட முடியாத அளவுக்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், உடனே தாங்களாகவே பொருட்களை அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

News January 20, 2025

நீலகிரி எஸ்டிபிஐ கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு

image

2025-2027ஆம் ஆண்டிற்கான நீலகிரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மாவட்டத் தலைவராக அப்துல் பஷீர், மாவட்டத் துணைத் தலைவராக அப்துல் கபூர், மாவட்டப் பொதுச்செயலாளராக பிரோஸ் ஜம்ஷீர், மாவட்டச் செயலாளராக சக்கீர், மாவட்ட பொருளாளராக செமியர் மற்றும் மாவட்ட உறுப்பினராக ரபீக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News January 20, 2025

காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

image

குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13-வது கொண்டே ஊசி வளைவில், காட்டு யானைகள் சாலை ஓரத்தில் முகாம் இட்டுள்ளன. தண்ணீரைத் தேடி அடர்ந்த காட்டை விட்டு வெளியே வந்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் சாலையை கடக்கும் வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் சென்று வருகின்றனர். 

News January 19, 2025

சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

image

நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சிக்குட்பட்ட ஆமைக்குளம் பகுதியில் பந்தலூர் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி ஸ்டாலின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுனருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அழைத்து சென்றனர்.

News January 19, 2025

காட்டேரி பூங்கா சாலையில் யானைகள் கூட்டம்

image

மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சமவெளி பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் தனித்தனி குழுவாக அலைந்து, திரிந்து வருகிறது. இதில் நேற்று இரவு காட்டேரி பூங்கா பகுதியில் ஐந்து காட்டு யானைகள் கூட்டமாக சாலைக்கு வந்து அங்குமிங்கும் நடமாடியது.

News January 18, 2025

நீலகிரி இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

News January 18, 2025

நீலகிரியில் முதல்வர் மருந்தகம் அமைக்க கால நீட்டிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 29ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் தெரிவித்துள்ளார்.டிச10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 29ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7338721400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News January 18, 2025

திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

திருநங்கையர் தினமான வரும் ஏப்ரல் 15ம் தேதி, திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. அரசு உதவி பெறாமல், வாழ்வில் சுயமாக முன்னேறிய, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு உதவியோருக்கு விருது வழங்கப்படுகிறது. திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது. அடுத்த மாதம்10ம் தேதிக்குள், awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

கூடலூரில் மின்தடை அறிவிப்பு

image

உப்பட்டி சேரம்பாடி மற்றும் கூடலூர் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில், வரும் 20ம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தகவல் வெளியிட்டுள்ளார். இதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணை மின் நிலையங்களில் சேர்ந்த பகுதிகளான கூடலூர், ஸ்ரீ மதுரை, நிலக்கோட்டை, தேவர் சோலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

News January 18, 2025

நீலகிரி: அக்னிவீர் திட்டத்தில் சேர அழைப்பு

image

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி, மத்திய பாதுகாப்பு படையில் உள்ள அக்னிவீர் திட்டத்தில், சேர விரும்புவர்கள், வரும் 27 ஆம் தேதிக்குள் தகுந்த கல்வித் தகுதியுடன் https://agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதற்கு 12-ம் வகுப்பு ஈடான கல்வித் தகுதியில் 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!