India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதகை ஆட்சியரகத்தில் நீலகிரி வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் தலைமையில், ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட பார்வையாளர் பேசும்போது, 2025 ஜனவரி 12ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கலாம் என்றார்.
ஊட்டியில் தன்னார்வ ரத்ததான முகாம்களை சிறப்பாக நடத்தி, தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் அளித்த 20 ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இதை நீவகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி பங்கேற்றனர்.
குன்னூர் சிம்ஸ்பூங்கா பகுதியில் துணைமின் நிலையம் புதிதாக அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்துவந்தது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்துவருவதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.12.6 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு பணிகள் முடிந்தால் குன்னூர் நகரில் 50 ஆயிரம் வீடுகளில் குறைந்த மின்அழுத்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை சார்பில் நாள்தோறும் காவல் அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
➤உதகை: நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் ➤உதகை: நகராட்சி மீது புகார் ➤குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத் தூள் தேக்கம் ➤சோதனை சாவடிகளில் தானியங்கி கேமராக்கள் ➤போக்சோவில் குஜராத் வாலிபர் கைது ➤நீலகிரியில் பாஸ்டேக் முறை: கலெக்டர் அறிவிப்பு ➤நீலகிரியில் 5 மதுக் கடைகள் மூடல்.
குன்னூரில் உள்ள ஏல மையத்தில் நடந்த 45-வது ஏலத்தில் 31.60 லட்சம் கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 15 லட்சத்து 23 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் மட்டுமே விற்பனையானது. 16 லட்சத்து 37 ஆயிரம் கிலோ தேயிலைத் தூள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளது. இதனால் ரூ.22 கோடி 43 லட்சம் மதிப்பிலான தேயிலைக் கொண்ட மூட்டைகள் குடோனில் தேக்கமடைந்து இருக்கிறது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்த தகவல் வருமாறு: நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வாகனங்கள் பதிவு செய்ய முதல் கட்டமாக கல்லாறு, குஞ்சப்பனை, நாடுகானி மற்றும் கக்கனல்லா சோதனைச் சாவடிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் 15 சோதனை சாவடிகளில் ஊழியர்களை கொண்டு வாகனங்கள் கண்காணிக்கப்படும்.
ஊட்டி அருகே 5 மாதமாக பணிபுரிந்து வரும் குஜராத் தம்பதியரின் 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குஜராத்தை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் நித்தின் (24) திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இதையடுத்து ஊட்டி இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் குஜராத் சென்று நித்தினை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவுப்படி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நீலகிரி மாவட்ட சோதனை சாவடிகளில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட உள்ளது என்றும், கியூ ஆர் கோடு மூலம் தானாக திறக்கும் தானியங்கி செக் போஸ்ட் அமைக்கப்படும் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குங்குரு மூல பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் பள்ளிக்கு தாமதமாக வந்த உடற்கல்வி ஆசிரியையிடம் தாமதமாக வந்ததற்காக கேள்வி எழுப்பிய தலைமை ஆசிரியை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் உடற்கல்வி ஆசிரியரால் தாக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.