India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி செப்.27 ஆகும். விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதுகுறித்த மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க https://nabfins.org/Careers/ என்ற லிங்கை அணுகவும். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

குன்னூர் நகராட்சி ஆணையர் இளம்பரிதி, குன்னூர் சந்தை நிலுவைத் தொகை விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிலுவைத் தொகை இல்லாமல் வாடகை செலுத்திய கடைகளுக்கு மட்டுமே தற்காலிகமாக கடைகள் ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள கடைகளுக்கு சீல் வைக்கவும், எந்த அறிவிப்பும் இன்றி அவற்றை அகற்றவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

▶️சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் ரூ.78,000 வரை மானியம் பெறலாம் ▶️www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே அனைவருக்கு ஷேர் பண்ணுங்க!

நீலகிரியில் இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உதகை நகராட்சி நகர் நல அலுவலர் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஊட்டி போட் ஹவுஸ் பகுதியில், நடத்திய பிளாஸ்டிக் சோதனையில், கர்நாடகாவிலிருந்து வந்த சுற்றுலா பேருந்தில் இருந்து 60 தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவரிடம் ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டது.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு திட்ட பொறியாளர் (கெமிக்கல்) என்ற பணியிடத்திற்கு 12 நபர்களை தேர்ந்தெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சம்பள விகிதம் (36,000/- +DA+HRA) விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் 4- ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு http://munitionsindia.in/careers விண்ணப்பிக்கலாம்.

நீலகிரியில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 115 சைபர் கிராம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 50 குற்றங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பணத்தை இழந்தவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் வரை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கூகுள் ரிவியூ பண முதலீடு என்று பல்வேறு வகைகளில் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த வகை மோசடிக்கு 1930க்கு உடனே தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பிரவீணா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <

தீபாவளி பண்டிகை அக்.,20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவர்கள், http://www.tnesevai.tn.gov.in இணையதள வழியாக மட்டுமே விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் வாயிலாக உரிய ஆவணங்களுடன் அக்.,10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் உதவி ஆணையர் செய்தியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், உள்ள, மேசன், கார்பெண்டர், கம்பிவேலை, எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர் வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக் மற்றும் சித்தாள் உள்ளிட்ட,11 தொழில் பிரிவுகளின் கீழ்,திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. நீலகிரியில் மட்டும் 500 கட்டுமான தொழிலாளர்களுக்கு, குன்னுார் மற்றும் கூடலுார் ஐ.டி.ஐ.,தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.

நீலகிரி மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.