Thenilgiris

News November 14, 2024

இலவச பேருந்துப் பயணத்தில் ஒரு கோடி மக்கள் பயணம்

image

விடியல் பயண திட்டம் மூலம் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் . நீலகிரி மாவட்டத்தில் 7-5-2021 முதல் 31-10-2024 வரை 71 ஆயிரத்து 902 மாற்றுத்திறனாளிகள்,1990 மாற்றுத்திறனாளி உதவியாளர்கள், 1670 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 1,00,54,057 மகளிர் என மொத்தம் 1.01 கோடி பேர் இலவசமாக பயணித்து பயனடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2024

கூட்டுறவு கடன் சங்க பணியாளர் வேலை நிறுத்தம்

image

நீலகிரி மாவட்டத்தில் 77 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வரும் நிலையில், இதில் பணிபுரியும் 23 செயலாளர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நீலகிரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் இன்று திடீர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடன் சங்க பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

News November 14, 2024

நீலகிரி: விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் தள்ளிவைப்பு

image

உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பா் மாதத்துக்கான குறைதீர்ப்பு கூட்டம் நவம்பா் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிா்வாகக் காரணங்களால் நவம்பா் 15ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளது.

News November 14, 2024

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியாரா துறை வேலை வாய்ப்பு முகாம் 23.11.24 கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.

News November 13, 2024

நீலகிரி இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் (13.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.

News November 13, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1. நீலகிரியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ விழா கோலாகலமாக நடைபெற்றது.
2.கோத்தகிரியில் கடும் குளிருடன் கூடிய சூழ்நிலை நிலவியது.
3. டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை – எல்.முருகன் கண்டனம்
4.தேசிய தொடர் ஓட்டப்போட்டிக்கு குன்னூர் மாணவன் தேர்வு
5.ரத்ததான ஒருங்கிணைப்பாளருக்கு விருது
6.உதகை மார்க்கெட்டில் தற்காலிக கூடுதல் கட்டட பணி தொடக்கம்

News November 13, 2024

நீலகிரி: ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் !

image

நீலகிரி, ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு திட்டத்தின் முதற்கட்ட தடுப்பூசி முகாம் 11.11.2024 முதல் 10.12.2024 வரை நடைபெற உள்ளது. இந்த வைரஸ் நோய் செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டுகளை பாதிக்கக்கூடியது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் ஒரு வாரத்தில் இறக்கும் வாய்ப்புள்ளது.எனவே நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், குன்னூர்,கோத்தகிரி,பந்தலூர் போன்ற பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனையில் முகாம் நடைபெற உள்ளது.

News November 13, 2024

நிதி முறைக்கேடு புகார் விசாரிக்க ஆட்சியரிடம் கோரிக்கை

image

கூடலூர் மன்வயல் பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், கூடலூர் நகராட்சியில் 2022 முதல் 2025 வருடம் வரை சுமார் ஆறுகோடி ரூபாய் பொதுநிதியில் நடைபெற்ற அனைத்து பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் ஊழல் தடுப்புத்துறை மூலம் விசாரனை நடத்தவேண்டும் என இன்று நேரில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படடது.

News November 13, 2024

டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை – எல்.முருகன் கண்டனம்

image

நீலகிரியில் டார்ச் லைட் வெளிச்சத்தில் குழந்தைக்கு சிகிச்சை செய்த அரசு மருத்துவமனையை கண்டித்து எல்.முருகன் X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது திமுக ஆட்சியில் தமிழகத்தில் அரசு மருத்துவமனை எந்த அவலத்தில் இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது. நிர்வாக திறனின்றி வெற்று விளம்பரத்திலேயே இந்த அரசு கவனம் செலுத்துகிறது, என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டம் தெரிவித்துள்ளனர்.

News November 13, 2024

தேசிய தொடர் ஓட்டப்போட்டிக்கு குன்னூர் மாணவன் தேர்வு

image

65வது குடியரசுதின மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு வ.உ.சி பூங்கா SADT மைதானத்தில் 6 முதல் 11ந் தேதி வரை நடைப்பெற்றது. இங்கு போட்டியில் பங்கேற்ற குன்னூர் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி மாணவன் பிரெட்ரிக் ஜோஸ் தலைமையிலான அணி 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றது. தேசிய அளவிலான தொடர் ஓட்டப்போட்டிக்கு பிரெட்ரிக் ஜோஸ் தேர்வானதாக இன்று அறிவிப்பால் பள்ளியே மகிழ்ச்சி.