Thenilgiris

News March 4, 2025

நீலகிரியில் 76 பேர் மொழிப் பாட தேர்வுக்கு வரவில்லை

image

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் கல்வி மாவட்டங்களில் உள்ள 41 மையங்களில், 2,925 மாணவர்கள் மற்றும் 3,395 மாணவிகள் என, மொத்தம் 6,320 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். மொழிப் பாட தேர்வான முதல் நாளில், 6,224 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 76 பேர் முதல் நாள் தேர்வுக்கு வரவில்லை. 20 பேர் விலக்கு பெற்றிருந்தனர்.

News March 3, 2025

நீலகிரியில் பெண் புலி இறப்பு

image

முதுமலை புலிகள் காப்பகம், உதகை கோட்டம் வனப்பணியாளர்கள் முன்னிலையில் முதுமலை புலிகள் காப்பாக வனக்கால்நடை மருத்துவரால் இறந்த புலியின் உடல் கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. 5வயதுடைய பெண் புலி என்றும் இறந்த புலி என்றும் , காயம் ஏற்பட்டு இறந்தது என்று தெரியவந்தது.

News March 3, 2025

நீலகிரியில் மார்ச் 31 கடைசி நாள்

image

தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகளில் மார்ச் 31 வரை வேட்டி,சேலையை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் மார்ச் 31க்குள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் கூடலூர் பந்தலூர் ஊட்டி ஆகி தாலுகாவில் உள்ள வேட்டி, சேலை வாங்காதவர்கள் மார்ச் 31க்குள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 3, 2025

ரூ.23.10 கோடி: தொழில் தொடங்க கடனுதவி

image

நீலகிரி மாவட்டம் தொழில் மையம் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் சுய தொழில் தொடங்க, தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடன் உதவி அளிக்க படுகிறது. அதன்படி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் இதுவரை 34 பேருக்கு ரூ.23.10 கோடி கடன் உதவி வழங்க பட்டதாக நேற்று நீலகிரி கலெக்டர் அறிவித்தார்.

News March 3, 2025

நீலகிரி போஸ்ட் ஆபீஸில் வேலை..இன்றே கடைசி நாள்

image

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரியில் மட்டும் 43 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்

News March 3, 2025

மலை ரயிலில் ஆபத்தா ? 1512 &139 அழையுங்கள்

image

நீலகிரி மலை ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே காவல் துறை பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஊட்டி, குன்னூர் ரயில் நிலையங்களில் நேற்று ரயில் பிரியர்களிடம், பயணத்தின் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனே 1512 மற்றும் 139 கட்டணமில்லா எண்களை அணுகி புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

News March 2, 2025

நாளை முதல் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம்

image

தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவியருக்கு தமிழகமெங்கும் நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 7,400 பேர் தேர்வில் கலந்து கொள்கின்றனர். தேர்வுக்கான முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். நாளை முதல் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

News March 2, 2025

ஊட்டி உருளை கிழங்கின் இன்றைய விலை விவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் தனது உறுப்பினர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஊட்டி உருளை கிழங்கை தினசரி ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி இன்றைய ஏலத்தில் முதல் ரகம் அதிகபட்சமாக ஒரு மூட்டை ரூ.1620 க்கும், குறைந்தபட்சமாக ரூ.1320 க்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 50 மூட்டைகள் வந்தன.

News March 2, 2025

உதகை பூண்டு தொடர் விலை சரிவு

image

உதகை பூண்டு கடந்த ஆண்டு இறுதி வரை பூண்டு ஒரு கிலோவுக்கு ரூ.500 வரை அதிகபட்ச விலை கிடைத்தது. கடந்த 20 நாட்களுக்கு முன் ஒரு கிலோவுக்கு ரூ.400 வரை விலை கிடைத்தது. தற்போது, படிப்படியாக விலை குறைந்து, மேட்டுப்பாளையம் மண்டிகளில் ரூ.60 முதல் ரூ.100 வரை மட்டும் விலை கிடைத்து வருகிறது. உற்பத்தி கணிசமாக உயர்ந்தும், திடீர் விலை சரிவால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

News March 2, 2025

உதகையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

நீலகிரி மாவட்டம் வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பாக வரும் 8-ம் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் உதகை பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு கொள்ள உள்ளன. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடுவோர் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

error: Content is protected !!