India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேக பூஜை விமர்சையாக நடைபெற்றது.
2.தெங்குமரஹாடாவில் சிறப்பு கிராம சபை
3.குன்னூர் ரயில் பாதைகள் சீரமைப்பு பணி தீவிரம்
4. 2ஆம் கட்ட சீசனுக்கு தயாராகும், குன்னூர் சிம்ஸ் பூங்கா
5.நீலகிரி கூடைபந்து அணிக்கு சீருடை வழங்கல்
6.தேசிய கூட்டுறவு வாரவிழா – அமைச்சர் பங்கேற்பு
குன்னூர் பெட்போர்ட்டில் பகுதியில் அதிக அளவு மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்து நெரிசலும் உள்ள பகுதி சாயங்காலம் ஸ்கூல் விடுகிற நேரம் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று வேக்கம் இறங்கிய காரணத்தால் பிரேக் பிடிக்காமல் நிறுத்தி வைத்த பைக்கின் மீது மோதல் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இரண்டாம் கட்ட சீசன் நடைபெறும். மேலும் அரசு தாவரவியல் பூங்கா குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற இடங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்குகின்றன. மேலும் குன்னூர் சிம்ஸ் பூங்கா லட்சக்கணக்கான மலர் செடிகள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
குன்னூர் இந்து முன்னணி சார்பாக குன்னூர் மார்க்கெட் விரிவாக்கத்திற்காக அறநிலைய துறைக்கு சொந்தமான விநாயகர் கோவிலில் தற்காலிக கடைகள் அமைக்கக் கூடாது என்றும், நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி மாரியம்மன் பூகுண்ட திருவிழா நடக்குமிடத்திலும் தற்காலிக கடைகள் வருவதை தடுத்திட வேண்டுமென்றும், கோயில்களின் புனிதத்தை காப்பதற்கு இன்று குன்னூர் துணை ஆட்சியரிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் கோரிக்கை வைத்தனர்.
57வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு இன்று (15.11.24) மதியம் 1.30 மணிக்கு, கோத்தகிரி நூலக வளாகத்தில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெறுகிறது. ஆர்.சம்பத் தலைமை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக கே.சரவணகுமார் பங்கேற்கிறார். இதில், ‘வாழ்க்கையை பண்படுத்துவது நூலகமே! தொலைக்காட்சியே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
கோத்தகிரியில் இருந்து கோடநாடு, கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம், நெடுகுளா, கேர்கம்பை, பேரகனி, கர்சன் உள்ளிட்ட பகுதியில் தொடர் மழையை அடுத்து கடும் குளிருடன் மேக மூட்டமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் முன் விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. டாக்டர்கள் தினேஷ், குருமூர்த்தி தலைமை ஏற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் (14.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.
1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2.கோத்தகிரியில் டூவிலரை தூக்கி வீசிய காட்டெருமை வீடியோ வைரல்
3.அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மெஷினை திறந்து வைத்த ஆட்சியர்
4.பந்தலூரில் இன்று கலைஞர் நூலகம் திறப்பு விழா
5.கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம்
6.முதுமலையில் உண்ணி செடி அகற்றும் பணி துவக்கம்
முதுமலை அருகே குனியல் பகுதியில் நெல் வயலில் காட்டு யானைகள் நுழையாமல் இருக்க சோலார் மின் வேலி போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ஒரு காட்டு யானை மின் வேலியை உடைத்து நுழைந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியது. இதற்கு வனத்துறை இழப்பீடு வழங்கவும், காட்டு யானை மீண்டும் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.