India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களவைத் தொகுதி ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், கூடலூர், அவினாசி, பவானி சாகர் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் குன்னூரில் 1,25,778 பேர், உதகையில் 1,31,789 பேர், கூடலூரில் 1,28,934 பேர், மேட்டுப்பாளையத்தில் 2, 20710 பேர், அவிநாசியில் 2,20710 பேர் பவானிசாகரில் 1,97, 880 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தமாக தொகுதி முழுவதும் 70.95% வாக்குப்பதிவாகியுள்ளது

நீலகிரியில் வெயிலின் தாக்கம் கூடுதலாகி வருவதால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவசர தேவையின்றி பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் தாக்கத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்’ என நீலகிரி ஆட்சியர் மு.அருணா தேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குன்னூர் அருகே ஜெகதளா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஏப்.,24) குன்னூர் நகரம் உள்பட பல்வேறு இடங்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்து இருந்தது. தற்போது மின் நிறுத்தம் ரத்து செய்வதாக குன்னூர் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கம் போல மின்சாரம் இருக்கும்.

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரிக்கு கேரளாவில் இருந்து கோழி, முட்டை போன்றவைகள் வாகனங்களில் ஏற்றி வருவது மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 3 வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.22) கிருஷ்ணாபுரம் பொதுமக்களின் சார்பாக அம்மனின் புலி வாகன உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஆடல், பாடல், அன்னதானம், அம்மன் அலங்கார ஊர்வலம், சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம், மண்டகப்படி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கூடலூர் அருகே உள்ள பந்தலூரில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் வழங்கப்பட்ட அரிசியில் எலியின் எச்சம், சணல் கயிறு, கான்கிரீட் கற்கள் இருப்பதை கண்டு பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ஊழியர்கள் மிகவும் அலட்சியமாக பதில் கூறுவதாக பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு சம்பந்தப்பட்ட துறையை கண்காணித்து தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை தொடர்பாக வழக்கு இன்று உதகை சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் நீதிபதி ஸ்ரீதர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் ஆஜராகாததால் வழக்கை 29 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் 126வது மலர் காட்சி முன்னிட்டு சிறந்த பூங்காக்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான நுழைவு படிவங்கள் பூங்கா அலுவலகத்தில் 24ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூங்கா உரிமையாளர்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 27ஆம் தேதிக்குள் பூங்கா பதிவு ஒன்றுக்கு ரூ.100 கட்டணத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.

திமுக தோல்வி பயத்தில் பெயர் பட்டியலிலிருந்து வாக்காளரின் பெயர்களை நீக்கியுள்ளது என நீலகிரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழகம் + புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. திமுக vs பாஜக vs அதிமுக vs நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவியது.
Sorry, no posts matched your criteria.