Thenilgiris

News May 12, 2024

128 வகையான 5110 பறவைகள் இருப்பது கண்டுபிடிப்பு

image

இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் தமிழக வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் இரண்டு முறை வனவிலங்குகள்,பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு நீலகிரி வனப்பகுதியில் கணக்கெடுப்பின்போது 128 வகைகளை சேர்ந்த 5110 பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 11, 2024

நீலகிரியில் நாளை மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

குன்னூர் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

image

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, மரப்பாலம் அருகே 13ஆவது கொண்டை ஊசி வளைவில் ஒரு பிக்கப் லாரி ஆக்ஸல் உடைந்து நடு ரோட்டில் நின்றது. அதை கடந்து செல்ல முயன்ற அரசு பேருந்தும் வளைவில் சிக்கியது. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பிக்கப் லாரியில் இருந்த பொருட்களை இறக்கப்பட்டது. இதையடுத்து பேருந்து பயணிகள் லாரியை தள்ளி நிறுத்திய பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.

News May 11, 2024

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.11) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

News May 11, 2024

நீலகிரி: படகு இல்லம் மூடல் பயணிகள் ஏமாற்றம்

image

நீலகிரியில், மழைக்கு பின்பு சீதோஷ்ண நிலை, அனுபவிக்கும் படியாக மாறியுள்ளது. இது சுற்றுலா மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் இயற்கை அழகை ரசிக்க செல்பவர்கள் படகு சவாரி செய்ய பைக்கரா படகு இல்லம் செல்கின்றனர். ஆனால் பராமரிப்பு பணி காரணமாக அது மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

10 வகுப்பு பொது தேர்வு முடிவு- மாணவி அசத்தல்

image

பந்தலூர், எருமாடு அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவி அஸானா 489 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவருடைய தந்தை நாகராஜ். தாயார் சஜிதா. இருவரும் ஆட்டோ ஓட்டுநராக உள்ளனர். தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News May 10, 2024

நீலகிரியிலிருந்து பெங்களூரு புறப்பட்ட சென்ற முதல்வர்

image

கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கடந்த 7ஆம் தேதி உதகை வந்தார். ஒரு தனியார் பங்களாவில் தங்கி இருந்து ஓய்வு எடுத்தார். அவர் இன்று உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். AICC உறுப்பினர் விவேக் லஜபதி, மாநில காங்கிரஸ் செயலாளர் நாகராஜ், மாவட்ட செயலாளர்கள் எஸ்.எம்.ரபீக், மானேக் சந்திரன், ரவிக்குமார் மற்றும் காங்கிரசார் மலர் கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

News May 10, 2024

நீலகிரி 29ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.68% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.93 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் நீலகிரி மாவட்டம் 29ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

கோடை விழா துவக்கம்

image

உலக புகழ்பெற்ற இயற்கை சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா களைகட்டுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் கட்டுப்பாடுகளால் கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை என்றாலும், இன்று உதகையில் 126வது மலர் கண்காட்சி கோலாகலமாக துவங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

error: Content is protected !!