India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய ஊராட்சிகளின் கீழ், 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் வரும் நாளை(அக்.11) அந்தந்த ஊராட்சிகளில் காலை 11 மணியளவில் நடக்கிறது. கிராமசபை கூட்டத்திற்கு கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

சென்னையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட வாரியாக சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், “ஊட்டி போன்ற இயற்கையாக அமையப்பெற்ற சுற்றுலாத் தலங்களில், சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து முதற்கொண்டு, விருந்தோம்பல் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இன்று உலக அஞ்சல் தினத்தில் கோத்தகிரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டி.எம். நஞ்சையா என்பவர் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவர் கோத்தகிரியில் பணியாற்றிய முதல் இந்திய தபால்காரர் என்று ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர். அப்போது ஆங்கிலேயர்களுக்கு கடிதங்கள் வரும்போது தபால்காரர் நஞ்சையா கடிதங்களை விநியோகிக்க நஞ்சையா ஒரு நாள் முழுவதும் மலைப்பாதைகள் வழியாக இறங்கி தபால் சேவையை செய்திருந்தார்.

தமிழகத்தில் ஊட்டியில் முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா வருவாய்த்துறைக்கு சொந்தமான ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நாய்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டு, இது சிறப்பாக இருக்கும் பட்சத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இது நாய்களுக்கு மிகப்பெரிய புத்துணர்வு மையமாக இருக்கும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849-24299 அழைக்கலாம். சென்னை மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

குன்னூர் அருகே நேற்று காலை 20க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன், ஜூப்ளி கார்டன் அருகே உள்ள ஆர்மி பப்ளிக்பள்ளி வளாகம், ராணுவ குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன. இதனால், பள்ளி மாணவ, மாணவியர், குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் இப்பகுதியை கண்காணித்து காட்டெருமைகள் பள்ளி வளாகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நீலகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள் இன சுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் (அக்.10) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 9-11-2025 ஆகும்.

நீலகிரி மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <

பொது நூலகத் துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் சாா்பில் உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் 4வது புத்தகத் திருவிழா அக்டோபா் 24-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை 10 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா்கள் என 50-க்கும் மேற்பட்டவா்கள் கண்காட்சியில் கலந்துக் கொள்ள உள்ளனா்.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர்பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.