India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உதகையில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் உதகை சட்டமன்ற தொகுதி பாஜக வாக்கு சாவடி குழு மற்றும் தேர்தல் பணி குழு கூட்டம் இன்று (23 தேதி ) நடைபெற்றது. உதகை நகர பாஜக தலைவர் சி பிரவீன் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட பொது செயலாளர்கள் பரமேஸ்வரன், அருண், உதகை நகர பொது செயலாளர்கள் சுரேஷ்குமார், ரித்து கார்த்திக், துணை தலைவர் ஹரி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் எஸ்.பி.வேலுமணி, ப.தனபால், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

நீலகிரி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 1963இல் பிறந்த இவரின் முழு பெயர் ஆண்டிமுத்து ராசா. இதுவரை மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் தொலைதொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இதுவரை தலா 4 முறை பெரம்பலூர், நீலகிரி பகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானி சாகர் மற்றும் மலை மாவட்டமான ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி மக்களவை தொகுதி. தேர்தல் தலைமை அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஊட்டியில் உள்ளது. இங்கு நேற்று வரை 3 நாட்கள் ஆகியும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

உதகை அருகே தும்மனட்டியில் உதகை கிழக்கு மண்டல் மையக்குழு கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. மண்டலத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட துணை தலைவர் பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட தமிழ் இலக்கியப் பிரிவுத் தலைவர் ராஜூ, மண்டலப் பொதுச்செயலாளர் பெள்ளி ராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நீலகிரி எம்பி தொகுதியின் பாஜக வேட்பாளர் பயோ டேட்டா இன்று (மார்ச் 22) அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர்: எல்.முருகன், முகவரி-353, குருஜி, 1வது குறுக்கு தெரு, அண்ணா நகர், சென்னை. பெற்றோர்: லோகநாதன், வருடம்மாள், பிறந்த தேதி: 29.05.1977, கல்வி தகுதி: MLM, மனைவி: கலையரசி, டாக்டர், மகன்கள்: தர்னேஷ், இந்திரஜித், தொழில்: வக்கீல், அரசியல்வாதி, அரசு பதவி: ராஜ்யசபா எம்பி (மபி) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் அறிவிப்பை அடுத்து, இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன் கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கலை ஒட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆனால் சுயேச்சை வேட்பாளர் உட்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் 2வது நாளான நேற்றும் (மார்ச் 21) மனு தாக்கல் செய்யவில்லை.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை சற்றுமுன் வெளியானது. இந்தப்பட்டியலில் மொத்தம் 9 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், நீலகிரி தொகுதி வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஆ.ராசா இந்ததொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் எல்.முருகன் அந்த தொகுதியில் போட்டியிடுவதால் நீலகிரி ஸ்டார் தொகுதியாகியுள்ளது.

நீலகிரி விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாதம் ஒரு முறை நடத்தப் பட்டு வருகிறது. இம்மாதம் குறைதீர் கூட்டம் நாளை (மார்ச் 22) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்து உள்ளார்.

நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக லோகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.