India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட எல்லையோரம் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் உள்ளது. பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு மாநில மாவட்டங்களின் எல்லையோர நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் உதகையில் நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தலைமையில் இன்று (மார்ச்.26) நடைபெற்றது. இதில், இரு மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நேற்று (மார்ச் 25) வரை 6 பேர் நீலகிரி ஆட்சியரிடம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதன் விவரம் வருமாறு: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், வையாபுரி, முருகேசன், பத்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நீலகிரி மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன் நேற்று (மார்ச் 25) உதகையில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ‘நீலகிரி தொகுதியில் வெல்வது மோடிஜியா? 2 ஜியா? என்பது மக்களுக்கு தெரியும்’ என்றார்.

உதகை நகரில் மேல் தலையாட்டு மந்து என்ற இடத்தின் அருகே மூலநகர் பகுதி காட்டில் இன்று பகல் ஒரு மணியளவில் காட்டு தீ ஏற்பட்டது . காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் எரிந்த தீ காற்றின் வேகம் காரணமாக மரங்களில் பரவியது . தகவலறிந்த, உதகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய குழுவினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி காட்டு தீயை அணைத்தனர் .

நீலகிரி மக்களவை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக ஊட்டி காபி ஹவுஸ் பகுதியிலிருந்து இன்று (மார்ச் 25) புறப்பட்டுச் சென்றனர். திரளான மக்கள் கூட்டத்தில் வாகனத்தில் நின்றபடி வாக்காளர்களுக்கு கை அசைத்து உற்சாகத்தை தெரிவித்தபடி கலெக்டர் அலுவலகம் சாலையை அடைந்தனர். பின்னர் எல்.முருகன் தனது வேட்புமனுவை தாக்கல்செய்தார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டமன்றத் தொகுதிகளான ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், பவானி சாகர், அவினாசி ஆகிய 6 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று (மார்ச் 24) மதியம் வரை 6 தொகுதிகளில் மொத்தம் ரூ.1,47,84,808 பறிமுதல் செய்துள்ளனர்.

பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் உள்ளன. திடீரென சேரம்பாடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனகாப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அறிக்கையில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசா நாளை நீலகிரி வருகிறார். அவருக்கு கோத்தகிரியில் முற்பகல் 11 மணி, உதகையில் பகல் 12 மணி , கூடலூரில் மாலை 4 மணிக்கும் மாபெறும் வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே திமுக மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, நீலகிரியில் ஆ.ஜெயகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.