India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரியில் வருகிற மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்கு செலுத்த ஏதுவாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை இன்று (மார்ச் 30) நீலகிரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மு.அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அவருடன் துறை அலுவலர்கள் சென்றனர்.

நீலகிரி எம்பி தொகுதி பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘நீலகிரி தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக மஞ்சித் சிங் பரார் (94899 – 30725), காவல் பார்வையாளராக மனோஜ் குமார் (63796 – 52828) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் புகார்களை கைப்பேசியிலோ (அ) நேரிலோ தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உதகை சுதந்திர நினைவு திடல் முன்பு இன்று (மார்ச் 30) மதியம் 12.30 மணியளவில் வருமான வரித்துறையின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.கணேஷ் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர் அருள் ஆண்டனி. பேராசிரியாக இருந்தவர் ரவி. இருவரும் மாணவர்களிடம் துறை மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று(மார்ச்.29) வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து உதகை லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கவர்னர் ஆர். என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர்னர் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது கூறி சர்ச்சை ஏற்படுவதால், கவர்னர் பயணத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கூடலூர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாளை (30.3.24) காலை 8 மணிக்கு கூடலூரில் நடைப் பெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில், முதல் பரிசு ரூ.10,001, 2 ஆம் பரிசு ரூ.5,001, 3 ஆம் பரிசு ரூ.3,001 என அறிவிக்கப் பட்டுள்ளது.

உதகையில் சீசனை முன்னிட்டு மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் 137 ஆவது ஆண்டு குதிரை பந்தயம் ஏப்ரல் 6 தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6 , 7 ,13 , 14 , 20 ,21 , 27 ,28 , மே 4 , 5 ,11 , 12 , 18 , 19 ,25 ,26 ,ஜூன் 2 ஆகிய தேதிகளில் மொத்தம் 17 நாட்கள் குதிரை பந்தயங்கள் நடைபெறும். இதில் சென்னை , பெங்களூரூ , மும்பை உள்பட பல இடங்களில் இருந்து 500 குதிரைகள், 35 ஜாக்கிகள்,
24 குதிரை பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

நீலகிரியில் வரும் சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று (மார்ச்.29) முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக நேற்று 4 புதிய ரயில் பெட்டிகள் குன்னூர் கொண்டு வரப்பட்டன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் 4 பெட்டிகள் ஊட்டி- கேத்தி இடையே இயக்கப்படும் என கூறினார்.

நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட உதகை சட்டமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓபிஎஸ் அணி, பா.ம.க, அ.ம.மு.க, த.மா.க, த.ம.மு.க, ஐ.ஜே.க, புதிய நீதிகட்சி, இ.ம.க.மு.க ஆகிய கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் பாரதிய ஜனதா செயல்வீரர்கள் கூட்டம், உதகை தேவாங்கர் சமூக திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

குன்னூர் அருவங்காடு கிளை நூலகம் மற்றும் செந்தமிழ் சங்கம் சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பயிற்சி பெறுபவர்களுக்கு வாராந்திர மாதிரி தேர்வும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தேர்வை இல்லம் தேடி கல்வியின் தேர்வுகளை பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் காயத்ரி நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.