India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட கோத்தகிரி கேர்பெட்டா கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு செல்போன் டவர் கோபுரம் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் டவர் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வருகின்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

நீலகிரிக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று (மார்ச் 31) மாலை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு குடும்பத்துடன் சென்றார். யானைகளுக்கு உணவு அளித்தார். பின்னர் யானைகள் பராமரிப்பு குறித்து ஆஸ்கர் விருது பெற்ற பாகன் பொம்மன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார். முன்னதாக வனத்துறை வாகனத்தில் காட்டுக்குள் சவாரி சென்றார்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் இன்று (ஏப்ரல் 1) முதல் ஜூன் மாதம் இறுதி வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ளது.

நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று உதகை நகரம் குந்தா பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் அவரது பிரச்சார வாகனத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டியிருந்தன. அதில் அதிமுக கொடி இடம் பெற்றிருந்தது. இது குறித்து வேட்பாளர் எல்.முருகன் கவனத்திற்கு வந்தது. அதன் பிறகு அதிமுக கொடி கழற்றப்பட்டது.

கீழ்குந்தா பகுதியில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பாஜகவினர் அவருக்கு படகர் கலாச்சார பாரம்பரிய முறைபடி சால்வை, தலைப்பாகை அணிவித்து வரவேற்றனர். அதே உடை அணிந்த வேட்பாளர் எல்.முருகன் ஊர்வலம் சென்று பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நீலகிரி, குந்தா தாலுக்கா, மஞ்சூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர், மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று மாலை 3 மணியளவில் சென்றார். அப்போது அங்கு விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள். அதை பார்த்த வேட்பாளர் எல்.முருகன் மைதானத்தில் இறங்கி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். இளைஞர்கள் அமைச்சருடன் படம் எடுத்துக்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர், ஓட்டுபட்டறை ஸ்டான்லி பார்க் பகுதியை சார்ந்த இரு இளைஞர்கள் கேரளாவில் உள்ள குருசுமலைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்துள்ளனர் இறந்த இருவரின் உடலும் பிரேத பரிசோதனை முடிந்து இன்று குன்னூர் கொண்டுவரப்பட உள்ளது. இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், காளிபிளவர் , பட்டாணி, புருக்கோலி, முள்ளங்கி, உருளை கிழங்கு, பூண்டு போன்ற மலை காய்கறிகள் பயிரிட படுகின்றன. இதில், நீலகிரி பூண்டுக்கு வெளி மார்க்கெட்டில் நல்ல கிராக்கி உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் பூண்டு விதைப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலுர் SS நகர் பகுதியை சேர்ந்த மணி என்ற இளைஞர், பாண்டியார் குண்டமுலா ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக அக்கபக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரியில் பறக்கும்படையை சேர்ந்த கீதா என்ற அலுவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 25ம் தேதி நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசா எம்பியின் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, சரிவர சோதனை செய்யவில்லை என புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று பறக்கும் படை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.