India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தனது குடும்பத்துடன் ஊட்டி ராஜ்பவனில் தங்கி வருகிறார். நேற்று (ஏப். 2) இவர் குடும்பத்துடன் ஊட்டி ரயில் நிலையம் சென்றார். பின்னர் குடும்பத்துடன் ரயிலில் ஏறி, குன்னூர் சென்றார். கவர்னர் வருகையை ஒட்டி ஊட்டி மற்றும் குன்னூர் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பெரும்பாலும் பள்ளி தேர்வுகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் கோடைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், காட்டேஜ்-களில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாதரணமாக ரூ.750 வசூலிக்கப்படும் அறைகள் தற்போது ரூ.1500 வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிறகு சீசன் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குன்னூர், மலை ரயில் நிலையத்தில், சீசனை ஒட்டி, போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் ஒலி பெருக்கி மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மலை ரயில், குகைகளை கடக்கும்போது தங்களது மொபைல் போன்களை தவற விடாதீர்கள் எனக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

நீலகிரி மலை ரயிலில் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் விரும்பி பயணிக்கிறார்கள். அப்படி வருபவர்கள் ரயில் முன் நின்று, போட்டோ எடுப்பது வழக்கம். ஆனால் இன்று காலை குன்னூர் ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுக்க தடை விதித்து விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு, பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

வருகிற பொது தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை நீலகிரி கலெக்டர் அருணா இன்று உதகை சேரிங்கிராஸ் பகுதியில் வினியோகித்தார் . பேருந்தில் ஏறி பயணிகளுக்கும் கொடுத்தார். அவ்வழியாக வந்த கேஸ் சிலிண்டர் வாகனத்தை நிறுத்தி சிலிண்டர்களில் பிரசுரங்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மக்களவைத் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா ஏப்ரல் -19 மறக்காமல் வாக்களிப்பீர் ! என்று அழைப்பிதழை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ளார். இதன்படி
இவ்விழாவில் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மக்களவைத் தொகுதியில் 100% வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அன்புடன் அழைக்கின்றோம்.

நீலகிரி ஆட்சியர் இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீலகிரியில் தற்போது 57 பறக்கும் படை குழுக்கள் இயங்கி வருகின்றன. தேர்தல் பார்வையாளர் கிரண் அறிவுறுத்தலின்படி, தீவிரமாக கண்காணிக்க பறக்கும்படை குழுவின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர், ஶ்ரீமதுரை அருகே மண்வயல் பகுதி கிராமங்களில் இன்று கூடலூர் ஒன்றிய திமுக செயலாளர் அ.லியாக்கத் அலி தலைமையில் திமுகவினர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் கங்காதரன், பிரதீஸ், மற்றும் பாக முகவர்கள் தேவசியா, பிரின்ஸ், மனோஜ், ராஜ்குமார், பாபு, ஆஷா , மணி, ஜோசப், அனில் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர், அம்மன்காவு கிராமத்தில் இருந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு ஆகியவற்றை வழியுறுத்தி கொளப்பள்ளியில் இருந்து சைக்கிள் பயணமாக கன்னியாகுமரி சென்று அங்கிருந்து லடாக் ,நேபாளம் வரை சைக்கிளில் பயணம் செய்ய உள்ள ஶ்ரீ சிவ பிரகாஷ் என்ற இளைஞர் இவரின் பயணத்திற்க்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உதகை ஆர்.கே.புரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அருணா , கூடுதல் ஆட்சியர் கெளசிக் ஆகியோர் சென்றனர் . பாராளுமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பெற்றோர்கள் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மாணவ , மாணவியர்களிடம் மாவட்ட ஆட்சியர் அருணா கடிதங்களை வழங்கினார்கள்.
Sorry, no posts matched your criteria.