Thenilgiris

News April 4, 2024

பட்டாசு வைத்த திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு

image

குந்தா, மஞ்சூரில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வருகையை ஒட்டி சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவரை வரவேற்கும் விதமாக, தேர்தல் விதியை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில், மட்டக்கண்டி திமுக பிரமுகர் சதீஷ்குமார் என்பவர் மீது மஞ்சூர் போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

தேர்தல் பொது பார்வையாளர் தலைமையில் கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக அரங்கில், நீலகிரி பாராளுமன்ற தொகுதி  பொதுத்தேர்தல் முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் இன்று நடைபெற்றது. நீலகிரி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பரார் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா முன்னிலையில் நடைபெற்றது.

News April 4, 2024

குடை சூடி இலை பறிக்கும் தொழிலாளர்கள்

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துவருகிறது. வெயிலால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கடந்த சில நாட்களாக குடை போன்ற தொப்பியை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிழல் போன்ற தாக்கம் ஏற்படுகிறது.

News April 3, 2024

எடப்பாடி பழனிசாமி நாளை நீலகிரி வருகை

image

நீலகிரியில் தேர்தல் பரப்புரை செய்ய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (4.4.24) ஊட்டி வருகிறார். நாளை காலை ஊட்டி ஏடிசி திடலில் அதிமுக சார்பாக நடக்கும் பொது கூட்டத்தில் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை அறிமுகம் செய்து வைக்கிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலர் வினோத், சாந்தி ராமன் ((Ex. MLA) உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

News April 3, 2024

நீலகிரி: வாக்கு பதிவு எந்திரங்கள் வருகை

image

நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக தேவைப்படும் 240 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து நேற்று எடுத்து வரப்பட்டது. இவைகள் மாவட்ட கலெக்டரின் கூடுதல் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று(ஏப். 3) பார்வையிட்டார்.

News April 3, 2024

நீலகிரியில் ஆ.ராசா சூறாவளி பிரச்சாரம்

image

குன்னூர் அருகே கேத்தி பாலாடா பகுதியில் 10 கிராமங்களில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசா  இன்று (ஏப்ரல் 3) காலை 10.30 மணியளவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், திமுக தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள்  உடன் சென்றனர்.

News April 3, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள்: நீலகிரி ஆட்சியர் ஆய்வு

image

நீலகிரி தொகுதிக்கு கூடுதலாக தேவைப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் கெளசிக் உடன் உள்ளார்.

News April 3, 2024

நீலகிரி: பதற்றமான வாக்கு சாவடியில் கலெக்டர் ஆய்வு

image

கூடலூர் சேரம்பாடி கண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி பதற்றமானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதை நேற்று (ஏப்ரல் 2) நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, எஸ்பி சுந்தரவடிவேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

News April 3, 2024

இரவு பகலாக ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பு

image

ஊட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லட்டி பகுதியில் நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று மாலை உதய சூரியன் சின்னத்திற்கு வாகனம் மீது நின்றபடி ஓட்டு கேட்டார். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருப்பதாக சுற்றுலா துறை மந்திரி ராமசந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் உடன் இருந்தார்.

error: Content is protected !!