India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தில் கள ஆய்வு நடைபெற உள்ளது. இதில், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட உயர்நிலை அலுவலர்கள் வருவாய் கிராமங்கள் வாரியாக கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்கிறார்கள், ஆய்வு மேற்கொள்ளும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை அளிக்கலாம்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 30 காலிபணியிடங்கள் உள்ளன. மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக இங்கு கிளிக் செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் .
ஊட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 -25ஆம் ஆண்டு 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டியல் பயிற்சி சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் 16ம் தேதி முதல் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் மே 6ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிறுவனங்கள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகள் படி, நீலகிரியில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். மே மாதம், 15ம் தேதிக்குள் 100% தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் சமுதாய நலனுக்காக பணியாற்றபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஊட்டி உருளை கிழங்கை தினசரி பொது ஏலத்தின் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. அதன்படி இன்றைய ஏலத்தில் ஒரு மூட்டை உருளை கிழங்கு முதல் ரகம் அதிகபட்சமாக ரூ.1230 க்கும், குறைந்தபட்சமாக ரூ.700 க்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 700 மூட்டை விற்றது.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
உதகை, குளிச்சோலை பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை இரண்டும் ஒன்றாக உலா வந்தன. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக, குடியிருப்பு பகுதியை நோக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கருஞ்சிறுத்தை, சிறுத்தை ஒரே இடத்தில் உலா வந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.04.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.