India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதுமலை தெப்பக்காடு பகுதியில் ‘மயில் கொன்றை’ மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதை உல்லாச பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வறட்சியின் காரணமாக இலைகள் காய்ந்து உதிர்ந்து பொலிவிழந்த நிலையில், தெப்பக்காடு சாலை ஓரங்களில் மலர்கள் பூத்திருப்பது மனதுக்கு இதமானதாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

நீலகிரி மாவட்ட மக்களவை தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணைய உத்தரவின்படி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதி வரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும், வாகன சோதனையும் தொடரும் என நீலகிரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (ஏப். 14) ஊட்டி வந்தார். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேடில் தரையிறங்கிய, அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அதில் ஏதும் கிடைக்கவில்லை. இன்று காலை (ஏப்.15) ஆ.ராசாவுக்காக ஓட்டு கேட்டு, காபி ஹவுஸ் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

உதகையில் மாவட்ட திமுக அலுவலக அரங்கில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு ” சமத்துவ நாள் ” உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (14 தேதி ) நடைபெற்றது . மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார் . சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டத்திக்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குன்னூர் 6 செ.மீட்டரும், பில்லிமலை எஸ்டேட் 5 செ.மீட்டரும், கோத்தகிரி எஸ்டேட் 4 செ.மீட்டரும், கெத்தை 3செ.மீட்டரும், கிண்ணக்கொரை 2 செ.மீட்டரும், கோத்தகிரி, பூதப்பாண்டி, பர்லியார், ஆதார் மற்றும் அழகரை எஸ்டேட் பகுதிகளில் 1 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று நீலகிரியில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உதகை காபி ஹவுஸ் பகுதியில் (ஏப்ரல்.15) காலை 10.30 மணியளவில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசாவை ஆதரித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் . அதை தொடர்ந்து குன்னூர் விபி தெரு திடலில் 11.30 மணிக்கு திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார். இந்த தகவலை நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக் தெரிவித்தார்.

நீலகிரி காவல் துறையினருக்கான தபால் வாக்கு பதிவு, உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்.12) நடைபெற்றது. காவல் துறையினர் தபால் வாக்கு செலுத்துவதை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா நேரில் பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் கெளசிக், ஆட்சியரின் உதவியாளர் சுரேஷ்கண்ணன் உடனிருந்தனர்.

நீலகிரியில் உள்ள மதுபான கிளப்புகள், ஓட்டல் பார்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும், மக்களவைத் தேர்தலை ஒட்டி வருகிற ஏப்ரல் 17, 18, 19 தேதிகள் மற்றும் மகாவீர் ஜெயந்தியான 21ஆம் தேதி மூடப்படும். இதை மீறி, மது விற்பனை செய்தால் மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவின் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி கலெக்டர் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.