Thenilgiris

News May 15, 2024

கோத்தகிரி பகுதியில் படுகர் தினம் விழா

image

கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் 31வது படுகர் தின விழா இன்று நடைபெற்றது. ஊர் தலைவர் எ.பில்லன் தலைமை தாங்கி வெள்ளை நிறம் கொடி ஏற்றி வைத்தார். சமுதாய தலைவர் எச்.பி ஹாரிகவுடரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  வழக்கறிஞர் பொப்ளி, ஊர் பெரியவர்கள் பி ராஜு, எச். ராமதாஸ், எம் ராமலிங்கம், எம் சந்திரன், மகளிர் சார்பில் பொன்னி, அருணா ஆகியோர் பேசினார்கள்.

News May 15, 2024

நீலகிரி: இன்று படுகர் தினம்… ஆ.இராசா வாழ்த்து

image

திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா வெளியிட்டுள்ள  அறிக்கை:  திராவிட மரபினத்தின் பூர்வீக குடிகளான நீலகிரி மலை மாவட்ட  படுகர் இன மக்கள் தங்களின் செம்மாந்த, கலாச்சார, நாகரிக பண்பாட்டுக்கூறுகளை பேணிக்காத்திட  ஆண்டுதோறும் கொண்டாடப்படும் “படுகர் தினத்தில்” அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன் என்றார்.

News May 15, 2024

அழகிய அவலாஞ்சி ஏரி சிறப்பு!

image

இயற்கை அழகு மிகுதியாக இருக்கும் அவலாஞ்சி ஏரி, ஊட்டியிலிருந்து மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளது. பரந்து விரிந்த இந்த ஏரியை சுற்றி அடந்த வனம் இருக்கிறது. அவலாஞ்சி ஏரி வளைந்து நெளிந்து காணப்படும். இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் மீன்பிடிக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் அருகில் கூடாங்கள் அமைந்து தங்கவும் அனுமதி உள்ளது சீறப்பான ஒன்றாகும்.

News May 15, 2024

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி

image

ஊட்டியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் சுன்னத் ஜமாத் பெடரேஷன் மதினா பள்ளி வாசல் நிர்வாகம் இணைந்து ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்காக தடுப்பூசி முகாமை நடத்தின. சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி துவக்கி வைத்தார். அதில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் 35 பெண்கள், 29 ஆண்கள் என 64 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News May 15, 2024

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி

image

ஊட்டியில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் சுன்னத் ஜமாத் பெடரேஷன் மதினா பள்ளி வாசல் நிர்வாகம் இணைந்து ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்காக தடுப்பூசி முகாமை நடத்தின. சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி துவக்கி வைத்தார். அதில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் 35 பெண்கள், 29 ஆண்கள் என 64 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News May 15, 2024

உதகை மலர் கண்காட்சி: குறைந்தது கட்டணம்

image

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி கடந்த 10ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.75  நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நுழைவு கட்டணம் அதிகம் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில் நேற்று முதல் பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.125 ஆக குறைக்கப்பட்டது. 

News May 15, 2024

நீலகிரி வருவதற்கு 6.96 லட்சம் பேர் இ-பாஸ் பதிவு

image

நீலகிரியில் நடைபெறும் கோடை விழாவை கண்டு மகிழ பல்வேறு பகுதிகளிலிருந்து வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் நேற்று மாலை வரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 391 பயணிகளும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 816 வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது என நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 15, 2024

நீலகிரியில் தொடர் மழை: மலர் அலங்காரம் பாதிக்குமா?

image

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் பூங்காக்களில் பல வகையான கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு கோடை விழா கடந்த மே 10ஆம் தேதி துவங்கி மே 20ஆம் தேதி நிறைவுபெறுகிறது. தற்போது ஊட்டி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சாரலுடன் மழையும், கனமழையும் பெய்து வருவதால் மலர் அலங்காரம் பாதிக்கப்படுமா எனச் சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

News May 14, 2024

நீலகிரி மாவட்டத்தில் 91.37 சதவிகிதம் தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் இன்று 11ஆவது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 2990 மாணவர்கள், 3416 மாணவிகள் என மொத்தம் 6406 பேர் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். அதில் 2622  மாணவர்கள், 3231 மாணவிகள் என மொத்தம் 5853 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி நீலகிரி மாவட்ட பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 91.37 சதவீதம் ஆகும்.

News May 14, 2024

நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்
( மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!