India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாநில அளவிலான டாக்டர் அம்பேத்கர் நினைவு கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்த 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் நீலகிரி மாவட்டத்திலிருந்து கலந்துகொண்ட மாணவ மாணவிகள் 3 தங்கப்பதக்கம், 8 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 64வது பழக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மு.அருணா நேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, சுற்றுலா பயணிகளுக்கு மலர் நாற்றுகளை வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் இருந்தனர்.

நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் தகவல்:- அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகார் / தகவலை நேரிலோ அல்லது கைபேசி வாயிலாகவோ தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புகார் / தகவல் கொடுப்பவர்களின் பெயர், விபரம் இரகசியமாக வைக்கப்படும். தொடர்புக்கு: DSP 94981 47234, இன்ஸ்பெக்டர்: 94981 76712, அலுவலகம்: 0423 2443962.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கூடலூர் புளியாம்பாறை அருகே கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில் நேற்று மாலை ராட்சத மரம் விழுந்து சமையலறை சேதமடைந்தது. அப்போது அதனுள் சமைத்துக் கொண்டிருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த மூதாட்டி சாமா (60) காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக கூடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரியில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நீலகிரியில் நேற்று (மே.23) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கின்னக்கோரையில் 7 செ.மீட்டரும், பவானியில் 6 செ.மீட்டரும், பந்தலூர் தலூகா அலுவலகம், கிளன்மார்கன், கெத்தை ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், குன்னூரில் 4 செ.மீட்டரும், குந்தா பாலம், அவலாஞ்சி, எமரால்டு, கூடலூர் பஜார், கேத்தி, வூட் பிரையர் எஸ்டேட் மேல்கூடலூர் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பதிவானது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பந்தலூர் தாலுகா தேவாலா அட்டி ரேஷன் கடை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் பழனி (84) என்ற முதியவர் அதிகாலை 2 மணி அளவில் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி அவர் மரணம் அடைந்தார். இந்த விபத்துக் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களில் அதிகமாக வருகின்றனர். மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் ஏராளமான வாகனங்கள் உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு உள்ளூர் டீசல் பெட்ரோல் பங்க் விலையில் கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் தனியார் நிறுவனம் ஒன்று டீசல் விநியோகம் செய்யும் நடமாடும் மொபைல் டீசல் பங்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

உதகை, தூனேரி இடையே சின்கோனா பகுதியில் ராட்சத மரம் இன்று பகல் 2 மணியளவில் சாலையின் குறுக்கே விழுந்தது. அதனால் சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ், உதகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ஸ்ரீதர் குழுவினர் இரண்டு மணி நேரம் போராடி மரத்தை அறுத்து வெட்டி அகற்றினார்கள். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
Sorry, no posts matched your criteria.