India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊட்டி வருபவர்களில் குதிரை பந்தயத்தில் பங்கேற்க ஒரு தனி கூட்டம் வருவதை மறுக்க முடியாது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஊட்டி குதிரை பந்தய ஓடுதளம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே மே 18, 19, 25, 26 ஆகிய 4 நாட்கள் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டது. ஜூன் 1ம் தேதி ராணுவ கோப்பைக்கான பந்தயம் நடப்பதாக ரேஸ் கிளப் இன்று அறிவித்துள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மரக்கிளைக்கு சுற்றப்பட்டு இருந்த முள்கம்பி அகற்றப்பட்டது. இந்நிலையில் முள் கம்பியை அகற்றி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வே2நியூஸில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக மரக்கிளையைச் சுற்றிய முள் கம்பியை பூங்கா நிர்வாகம் அகற்றி மரத்தை சுற்றி வேலி அமைத்தனர். இதனைச் சுற்றுலா பயணிகள் வரவேற்றுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாம்ப் ராக் என்றழைக்கப்படும் ஆட்டுக்குட்டி பாறை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். இந்த இடம் குன்னூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடம் முழுவதும் தேயிலை தோட்டங்கள் மற்றும் காபி எஸ்டேட்டுகளும் அமைந்துள்ளது. அழகிய புகைப்படம் எடுக்க சிறந்த இடமாக இருக்கிறது. மேலும் பாறையின் மேல் இருந்து பார்க்கையில் மலைகளை ஊடுருவும் மேகங்களை காணும்போது இயற்கை விந்தை புரியும்.

நீலகிரி மாவட்டம் உதகை சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 16 நாள் மலர் கண் காட்சியை 2.50 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். 13 நாள் ரோஜா கண்காட்சியை 1.10 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற 3 நாள் பழக்கண்காட்சியை 20 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இந்த விழாக்களுடன் நீலகிரி கோடை விழா முடிவடைந்தது.

கூடலூர் அருகே சேமுண்டி கிராமத்தைச் சேர்ந்த பாபச்சன் என்பவரது தோட்ட வீட்டில் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இதைப் பார்த்தவர்கள் வீட்டின் கதவை வெளியே தாழிட்டுவிட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை மருத்துவர் ராஜேஷ்குமார் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மயக்கம் அடையச் செய்தார். பின்னர் நேற்று வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு வாகனத்தில் முதுமலை காப்பகம் வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோத்தகிரியில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டுக்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ள பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவ, மாணவிகள் www.tnscert.org என்ற இணையதளத்தில் மே 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் பேருந்து நிலையம் அருகில் செயல்படும் அன்னலட்சுமி டீக்கடையில் தவறவிட்ட ரூபாய் 26,100 ஐ கடையின் உரிமையாளர் அதிமுக நிர்வாகி எல். மணி அவர்கள் எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் டீக்கடையில் பணத்தை தவறவிட்ட பாரதி நகரை சேர்ந்த சேகர் என்பவரிடம் காவல்துறையினர் பணத்தை ஒப்படைத்தனர். எல்.மணி அதிமுக Ex பால்வள தலைவராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரூவில் இருந்து, குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ மையத்திற்கு வீட்டு பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, ஊட்டி அரசு மருத்துவமனை சாலையில் தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின் கம்பியில் உரசி, திடீரென தீப்பிடித்து எரிந்தது.சம்பவ பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து பொருட்களை மீட்டனர். இருப்பினும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

குன்னுார் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய 64வது பழக்கண்காட்சியில் 10 மாவட்டங்களின் பல்வேறு வடிவமைப்புகள் அதில் கன்னியாகுமரி தேனீ கிருஷ்ணகிரி புஜ்ஜி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை நாமக்கல் டிராகன் கரூரின் அன்னப்பறவை கடலுார் கலங்கரை விளக்கம் மதுரை மரவன் பட்டாம்பூச்சி திருச்சி பாண்டா பெரம்பலூர்.இந்தியா கேட் ஆகியவை இடம் பெற்றுள்ளன.வடிவமைப்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

கூடலூர் கம்மாத்தி சேமுண்டி பகுதியில் பாபச்சன் என்பவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் இன்று சிறுத்தை புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.