Thenilgiris

News May 30, 2024

மழை சேதம்: தொலைபேசி எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மு.அருணா தகவல்: நீலகிரியில் மழை சேதம் மற்றும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக மாவட்ட  கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 1077 மற்றும் 0423 2450034, 2450035 ஆகிய எண்களை தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். உதகை கோட்டம் 0423 2442433, குன்னூர் கோட்டம் 0423 2206002, கூடலூர் கோட்டம் 04262 261252 ஆகிய எண்களுடன் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பேரிடர் தகவல்களை தெரிவிக்கலாம்.

News May 30, 2024

நீலகிரி டால்பின் மூக்கு சிறப்பு!

image

டால்பின் மூக்கு என்பது குன்னூரிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள ஒரு காட்சி முனை (வியூ பாயிண்ட்) ஆகும். இந்த முனை, ஒரே பெரிய பாறையின் மேல் டால்பின் மூக்கின் போல் அமைந்துள்ளதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து பார்க்கும்போது மலைகளின் பரவலான காட்சியையும், பல மீட்டர் உயரத்தில் இருந்து விழும் கேத்தரின் அருவியையும் காணலாம். அடுக்கடுக்கான தேயிலை தோட்டங்களையும், வளைவு நெளிவான சாலைகளையும் காணமுடியும்.

News May 30, 2024

சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

இந்திய அரசு நீர், நிலம், ஆகாயத்தில், சாகச விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே’ விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் இதற்கான இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 31ஆம்  தேதிக்குள் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News May 30, 2024

நீலகிரி: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

image

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, காமராஜ் சாகர், பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்கூருத்தி உள்பட 13 அணைகள் உள்ளன. இங்கு குந்தா, பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தற்போது அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

News May 29, 2024

குட்டி யானை தாயிடம் சேர்ந்தது

image

பந்தலூர் தாலுகா, கொளப்பள்ளி பகுதியில் இன்றைய தினம் ஒரு குட்டி யானை தவறி கிணற்றில் விழுந்தது குட்டி யானையை மீட்பதற்கு கிணற்றின் அருகே குழி தோண்டி சாலை போல் அமைத்து வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை வனப் பகுதிக்குள் சென்று தாய் யானையுடன் பத்திரமாக சேர்ந்தது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

News May 29, 2024

நீலகிரி விவசாயிகள் வருத்தம்

image

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பழங்கள் விளைகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் ஊக்குவிப்பு அளிக்கும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் பழ கண்காட்சி தோட்டக்கலை துறை மூலம் நடத்தப்படுகிறது. பழ கண்காட்சியில் பல்வேறு வடிவமைப்புக்காக பயன்படுத்தப்படும் பல டன் பழங்கள் வீணாகி வருகின்றன. இது விவசாயிகளின் உழைப்பை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

News May 29, 2024

லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

image

நீலகிரி மாவட்ட அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகார் போனிலோ அல்லது நேரில் வந்தோ தெரிவிக்கலாம். தொடர்பு எண்கள்: டிஎஸ்பி – 8015837234, 9498147234 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்கள்; ஆய்வாளர் – 9498176712, 0423-2443962 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். பெயர் மற்றும் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 28, 2024

அதிக வருமானம் ஈட்டிய போக்குவரத்து கழகம்

image

நீலகிரி மாவட்டம் உதகையில் நடப்பாண்டு கோடை விழாவை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் உதகை கிளை சார்பில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மே 1 முதல் சுற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு தினமும் சராசரியாக 3 லட்சம் வருவாய் ஈட்டிய நிலையில் கடந்த 27 நாட்களில் ரூ. 60 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News May 28, 2024

நீலகிரி: அரசு பூங்காக்கள் நுழைவு கட்டணம் திடீர் உயர்வு

image

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 50 சிறுவர்களுக்கு 30 என வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது திடீரென்று நேற்று முதல் பெரியவர்களுக்கு 100 சிறுவர்கள் ரூ.50 என உயர்த்தப்பட்டுள்ளது. ரோஜா பூங்கா, குன்னூர் அரசு சிம்ஸ் பூங்கா ஆகியவைகளில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50 என உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 28, 2024

உதகை: சாவர்க்கர் படத்திற்கு கவர்னர் மலர் தூவி மரியாதை

image

உதகை கவர்னர் மாளிகையில் சாவர்க்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சாவர்க்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக கவர்னர், எக்ஸ் பதிவில், பாரத தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!