India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி: பந்தலூர் பேருந்து நிலையம் அருகே இண்டிகோ நகர், இந்திரா நகர் கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் நேற்று காலை யானைகள் முகாமிட்டன. இந்த நிலையில் காலை நடைபயிற்சிக்கு சென்றவர்கள், யானைகள் வரிசையாக நின்றிருந்ததைக் கண்டு பயந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த வனவர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் அவற்றை வன பகுதிக்குள் விரட்டினர்.
உதகை கூடலூர் சாலை நடுவட்டம் பகுதியில் இன்றைய தினம் மாலை இருசக்கர வாகனமும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து நடுவட்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகை, ரெயில் நிலையத்தில் புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளி என்.சி.சி மாணவர்கள் சார்பில் மத்திய அரசின் மக்கள் மத்தியில் சுத்தம் மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. என்.சி.சி அதிகாரி டேவிட் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாணவர்கள் ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர். பிளாஸ்டிக் தவிர்க்க சுற்றுலா பயணிகளிடம் தெரிவித்தனர்.
நீலகிரி திமுக மாணவர் அணிக்கு நகர, ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்காக 29ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில், உதகையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. இதில் மாநில மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், இணை செயலாளர் எஸ்.மோகன், துணை செயலாளர் வி.ஜி.கோகுல் ஆகியோர் நேர்காணல் நடத்த உள்ளனர். இந்த தகவலை நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: உதகை அருகே அண்ணா காலனி பகுதி மக்கள் ஆடுகளை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு நேற்று வரை 10 வளர்ப்பு ஆடுகளை புலி வேட்டையாடி சென்றுள்ளதாக, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஊட்டி சேரிங் கிராசில் உள்ள தோட்டக்கலை துறை கூட்ட அரங்கில் வரும் 25ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் புதிய தொழில் தொடங்குவோர் தொழில் முனைவோருக்கான கடன் மேளா மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழில்கள் தொடங்க ஆலோசனையும், வங்கிகள் மூலமாக கடன் உதவியும் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆகியவற்றின் கீழ் வட்டார வளர்ச்சி பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வரும் 24ஆம் தேதிக்குள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீலகிரி வட்டாரங்களில் நிறுவன மேம்பாடு திறன் வளர்ப்பு துறையில் 3 முதல் 5 வருட அனுபவம், தமிழ் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்து, வலுவான தகவல் தொடர்பு திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டம் உதகை ஏரியில் உள்ள கூடுதல் படகு இல்லம் வளாகம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட கட்டுமான மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது.
அந்த பணிகளை தமிழக தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கே . ராமச்சந்திரன் நேற்று ஆய்வு நடத்தினார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் ஆகியோர் உடன் இருந்தனர் .
ஊட்டி தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் 35 மகளிர் குழுவினருக்கு தலா ரூ.5 லட்சம் கடன் வழங்க திட்டமிட்டு நேற்று அதை காசோலையாக வழங்கப்பட்டன. இதற்காக தலா ரூ.42,000 லஞ்சம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., ஜெயகுமார் தலைமையில் சென்ற குழுவினர் கணக்கில் வராத ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்து ஊழியர்கள் யாமினி, பிரேமலதா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோத்தகிரி எம்.கைகாட்டியை சேர்ந்தவர் சஜிதா (37). இவர் தனது 4 வயது மகளை, வறுமை காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து கோத்தகிரி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்டில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று சஜிதாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.