India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உதகை நகராட்சிக்குள்பட்ட 32 மற்றும் 33-ஆவது வாா்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மண் சாலை மட்டுமே உள்ளது. இந்த சாலையும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் இந்தச் சாலையை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தாா் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீலகிரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை( ஜூன்.21) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கூடுதல் ஆட்சியர் வளாகம் பிங்கர்போஸ்ட் ஊட்டியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட செப்போடு பகுதியை சேர்ந்த சென்னா (74) என்பவரை நேற்று முன்தினம் காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதல் கட்ட இழப்பீடு தொகையாக ரூ.50 ஆயிரம், மீதமுள்ள ரூ.9.50 லட்சத்தை காசோலையாக அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் நேற்று வழங்கினர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் நாளை மறுநாள் (21.6.24 ) நீலகிரி வரும் நிலையில், மாவட்ட பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. அவருக்கு மதியம் 2 மணிக்கு கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலும், மாலை 5 மணிக்கு உதகை சேரிங்கிராசிலும், மாலை 7 மணிக்கு குன்னூர் பேருந்து நிலையத்திலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கரிய சோலை பகுதியில் நேற்று இரவு கனத்த மழை பெய்தது. இதில், பள்ளிக்கூடத்தின் தடுப்பு சுவர் இடிந்து ஒரு வீட்டின் சமையலறை மேல் விழுந்தது. இந்நிலையில், இதனை நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா இன்று நேரில் பார்வையிட்டார் . ஜேசிபி வாகனம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன. மேலும், பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்று திறனாளி நல துறையின் மூலம், 2021 மே 7 முதல் இதுவரை 1,674 மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு ரூ.7 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவி தொகையும், 937 கடும் ஊனமுற்றோருக்கு ரூ.3.71 கோடி மதிப்பில் பராமரிப்பு உதவி தொகையும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 44 பேருக்கு ரூ.18.10 உதவி தொகையும் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா பகுதிகளில் ஜூன் 19,20,21 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைப்பெறும் நிலையில், இன்று அதன் முதல் நாள் கூட்டம் பந்தலூரில் தொடங்குகிறது. இதற்கு நீலகிரி மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை வகிக்கிறார். மேலும், அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குன்னுார் தாலுகாவில் கேத்தி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி உட்பட தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார் மற்றும் உல்லத்தி ஆகிய ஊராட்சிகளை இணைத்து ஊட்டி நகராட்சியை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக அறிவிக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்தில் பேரூராட்சி ஊராட்சிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி தேயிலை ஏலத்தில், வரத்து விற்பனை ஏற்றம் கண்டு ஒரே வாரத்தில், 5.25 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த வாரத்தை விட 3.20 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. மேலும் 2.59 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது.இதனால் 90.66 சதவீதம் தேயிலை தூள் விற்றது. டீ தூள் ஏலத்தில் சராசரி விலை கிலோவுக்கு ரூ.105 கிடைத்துள்ளது. இதன் காரணமானாக வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நடப்பாண்டு ஜீவன் ரக் ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விபரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஜீவன் ரக் ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.