India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பட்சி வினோத் தலைமையில் இன்று பகல் 11:30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு செயலாளர கே.ஆர்.அர்ஜூணன், மாவட்ட துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்திரன், நகர செயலாளர் சண்முகம் உட்பட அதிமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

நீலகிரி, திருப்பூர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று(ஜூன் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கவும் வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், நீலகிரி உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சில மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இது பழமையான கட்டிடத்தின் பொலிவை பாதிக்கும் என்பதால் அதை அகற்ற சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ஊட்டியில் பழைய கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், நேற்று(22.6.24) அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று ஊட்டியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “கள்ளக்குறிச்சி உயிரிழப்பு சம்பவத்துக்காக பொதுமக்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் இதற்கு தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பறிக்க தொழிலாளர்கள் தினசரி பணிக்கு செல்வது வழக்கம். இந்ந நிலையில் கோத்தகிரி அருகே டி.மணியட்டி பகுதியில் நேற்று பட்டபகலில் புலி நடமாடியது. இதனை கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் திரும்பி சென்றனர். இத்தகவலை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அப்துல்காதர் அடுத்த மாதம் 26 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதில் அரசு வழக்கறிஞர் கூறும்போது, கொலை நடந்தவுடன் கனகராஜின் போனிற்கு வெளிநாட்டு மொபைல் போனிலிருந்து 5 அழைப்பு வந்துள்ளதால், அதை கண்டறிய இன்டர்போல் போலீஸ் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சமீப காலமாக பெண்கள் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி என வாகனங்கள் ஓட்டி அசத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நடைப்பெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில், நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா 3 திருநங்கை பயனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை இன்று வழங்கினார்.

கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 19) தொடங்கிய ஜமாபந்தி நேற்று நிறைவு பெற்றது. முதல்நாளில் அடிப்படை வசதி கேட்டு 75 மனுக்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2ஆம் நாளான நேற்று 191 என மொத்தம் 266 மனுக்கள் பெறப்பட்டன. கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் மனுக்களை பெற்றார். மேலும், இதில் வட்டாட்சியர் ராஜேஸ்வரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.