Thenilgiris

News July 3, 2024

குடிநீர் தொட்டியில் மலம்? நேரில் அதிகாரிகள் ஆய்வு

image

கோத்தகிரி கோடநாடு பகுதியில் மாற்றுத்திறனாளி மக்கள் வசிக்கும் பிரியா காலனி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவு கலந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம தலைவர் மணிகண்டன் மாவட்ட கலெக்டரிடம் நேற்று நேரில் புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி இன்று அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

News July 3, 2024

நீலகிரி மக்களவை தொகுதி ஆய்வு கூட்டம்

image

நீலகிரி மக்களவை தொகுதிக்கான பாஜக ஆய்வு கூட்டம் நாளை பகல் 12 மணிக்கு மேட்டுப்பாளையம் (EMS) மகாலில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகிக்கிறார். இதில் நயினார் நாகேந்திரன் MLA பங்கேற்கிறார். இதில் மாநிலம், மாவட்டம், மண்டலம் நிர்வாகிகள் பங்கேற்பதாக மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது.

News July 3, 2024

நீலகிரியில் Ex கூடுதல் தலைமை செயலாளர் தர்ணா

image

நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான சுர்ஜித் சவுத்திரி நேற்று (ஜூலை 2) நீலகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். விதிமுறைகளை மீறி பாறைகளை உடைத்து நடக்கும் கட்டட பணியை நிறுத்தக்கோரி சுர்ஜித் சவுத்திரி திடீர் தர்ணாவில் ஈடுபட்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News July 2, 2024

மழையை எதிர்கொள்ள தயார்: நீலகிரி கலெக்டர்

image

நீலகிரி கலெக்டர் அருணா நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நீலகிரியில் மொத்தம் 26 வீடுகள் பகுதி சேதமடைந்து இருப்பதாகவும், ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News July 2, 2024

நீலகிரி: சாதித்த கலைஞர்களுக்கு பரிசு

image

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, கோவை மண்டலம் கலை பண்பாட்டு மையம் சார்பில், கடந்த, பிப்.25ம் தேதி, ஊட்டி கலை கல்லூரியில், மாவட்ட அளவிலான இளைஞர் கலைப் போட்டி நடந்தது.
இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு முறையே 6,000 ரூபாய், 4,500 மற்றும் பொன்னாடை போர்த்தப்பட்டது. 3,500 ரூபாய் ரொக்க பரிசு நேற்று மாலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார்.

News July 2, 2024

தேவாலயங்களை பழுதுபார்க்க நிதி உதவி

image

நீலகிரி மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 1, 2024

நீலகிரியில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

News June 29, 2024

முதுமலை யானைகள் முகாமில் குட்டி யானை உயிரிழப்பு

image

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. அங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் மருதமலை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண் குட்டி யானை பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த நிலையில் குட்டியானைக்கு நேற்று (ஜூன் 28) உடல்நல குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுமார் 8.45 மணி அளவில் குட்டி யானை உயிரிழந்தது.

News June 29, 2024

பழங்குடி மக்களின் பொருள்கள் கண்காட்சி

image

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மலைவாழ் மக்கள் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை மேம்பாட்டு இணையம் சார்பில் விற்பனை கண்காட்சி நடந்துவருகிறது. இதில் தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பழங்குடியின மக்கள் பங்கேற்றுள்ளனர். இக்கண்காட்சி ஜூலை 3ஆம் தேதி இரவு 7 மணி வரை நடக்கிறது.

error: Content is protected !!