Thenilgiris

News July 12, 2024

நீலகிரியில் ரகசியமாக உடல்கள் அடக்கம்: ஆர்டிஓ ஆய்வு

image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் சீல் வைக்கப்பட்ட காப்பகம் அருகே சதுப்பு நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் இரவில் ரகசியமாக புதைக்கப்பட்டதாக வந்த தகவலின்பேரில் ஆர்டிஓ, செந்தில் குமார் தலைமையிலான குழுவினர் நேற்று காப்பகம் அருகே புதைக்கப்பட்ட சதுப்பு நிலத்தை நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.

News July 12, 2024

நீலகிரியில் 2 நாள் கனமழை

image

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் (ஜூலை 12, 13) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 12, 2024

ரூ.20 ஆயிரம் லஞ்சம்: தாசில்தார் கைது

image

நீலகிரி, கூடலூர் தொட்டமூலா பகுதியை சேர்ந்தவர் உம்மு சல்மா. இவர் நிலம் மறுவறை தொடர்பாக தாசில்தார் ராஜேஸ்வரியை அணுகியபோது அவர் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பரிமளா கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை தாசில்தாரிடம் நேற்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர்.

News July 12, 2024

கலைஞர் கனவு இல்லம் மூலம் நீலகிரியில் 1350 வீடுகள்

image

கீழ்கோத்தகிரி ஐயப்பன் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மக்களோடு முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் கே.ராமச்சந்திரன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 1350 வீடுகள் கட்டப்படும். பழங்குடி மக்களுக்கு 350 வீடுகள் வழங்கப்படும். தேனாடு, கெங்கரை, கோடநாடு குஞ்சப்பனை, நடுஹட்டி, நெடுகுளா உள்பட ஊராட்சி பகுதிகளில் 275 வீடுகள் வழங்கப்படும் என்றார்.

News July 11, 2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 450 மனுக்கள்

image

கோத்தகிரியில் உள்ள கீழ்கோத்தகிரி ஐயப்பன் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் மனைப்பட்டா, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு கொடுக்கப்பட்ட 450 மனுக்கள் ஒவ்வொரு துறையாக கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து பிரித்து அனுப்பும் பணிகளை அமைச்சர் கே. ராமச்சந்திரன் பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆட்சியர் அருணா உடன் இருந்தார்.

News July 11, 2024

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர்

image

கோத்தகிரி தாலுக்கா, கீழ் கோத்தகிரி ஐயப்பன் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தலைமையேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு. அருணா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

News July 11, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையினால் நீலகிரியில் குளிர்ச்சியான சூழல் உருவாக வாய்ப்புள்ளது.

News July 11, 2024

தமிழக கேரள எல்லையில் நக்சல்கள் முகாம்

image

தமிழக கேரள எல்லைப் பகுதியான பந்தலூர் மானந்தவாடி பகுதியில் நக்சல் தடுப்பு போலீஸ் எஸ்பி பிஜூராஜ் தலைமையில் போலீசார் நேற்று (ஜூலை 10) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நக்சல்கள் தங்கி இருந்த குடில், சீருடைகள், பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நக்சல் கூடாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் தமிழக கர்நாடக எல்லையை ஒட்டிய வனப்பகுதிக்கு இடம் மாற வாய்ப்பு உள்ளது” என்றனர்.

News July 11, 2024

14 கிமீ சாலை, 60 வீடுகளுக்கு மின்சாரம்: கலெக்டர்

image

உதகை, பழங்குடியின மக்கள் வசிக்கும் ஆனைகட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. அங்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா பேசுகையில், சிரியூர் முதல் வாழை தோட்டம் வரை 14 கிமீ சாலை ரூ.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஆனைகட்டியில் துணை ஆரம்ப  சுகாதார நிலையம் ஏற்படுத்த அரசு அனுமதிக்கு திட்டம் அனுப்பபட்டுள்ளது. 60 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News July 10, 2024

7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

error: Content is protected !!